உலகில் நடைபெற்று வரும் சரக்கு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் கப்பல்களால் கொண்டு செல்லப்படுகிறது, இந்த இந்த கப்பல்களை நிர்வகிக்கும் கடற்படையினர் வர்த்தகம் சீராக நடத்துவதை உறுதி செய்ய இரவு பகல் பாராது அயராது உழைக்கின்றனர். அவர்களின் பங்களிப்புகளை கவுரவிக்கும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஐ.நா.,சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச கடல்சார் அமைப்பு 2010ம் ஆண்டு ஜூன் 25ஐ சர்வதேச மாலுமிகள் தினமாக அறிவித்தது. 2011 முதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு இன்றியமையாத மாலுமிகள் / கடற்படையினரை கவுரவிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகளின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து தற்போது சிறப்பாக நடைபெற்று வர கடைப்படையினர் என அழைக்கப்படும் மாலுமிகள் தங்கள் வேலையை சிறப்பாக பணியாற்றுவதே காரணமாகும். எதிர்காலத்தில் அவர்களால் தான் கடற்படை பலம் பெரும் என குறிப்பிடுகின்றனர்.
கடற்படையினரின் பணிகள் மற்றும் வாழ்க்கைமுறை குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) இந்த தினத்தை கொண்டாடுகிறது. இந்த தினத்தில், வெளிநாட்டு துறைமுகங்களில் மாலுமி உரிமைகள், அவற்றின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும், விவாதிக்கவும் (ஐ.எம்.ஓ) வாய்ப்பை பெறுகிறது
உலகம் முழுவதும் உள்ள 1.5 மில்லியன் மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும், அவர்களை கவுரவிக்கவும் இந்த தினத்தில் உறுதி ஏற்போம். சர்வதேச மாலுமிகள் தினமான இன்று, சில நகரங்களில் மாலுமிகளுக்காக சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement