சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
இயக்குர் மணிரத்னம் டைரக்ஷனில் வெளியான பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இந்நிலையில் தற்போது ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவரது போர்ஷன்கள் நிறைவடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஜப்பான் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த கார்த்தி: நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் ரிலீசாகி அவரது ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீசாக ரசிகர்களை உற்சாகத்தை கொடுத்தன. வெற்றிப்படங்களாகவும் அமைந்தன. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய வெற்றிப் படங்களை கடந்த ஆண்டில் நடிகர் கார்த்தி கொடுத்திருந்தார். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவரது நடிப்பில் ஜப்பான் படம் ரிலீசாகவுள்ளது.
ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜப்பான் படம் கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தில் கார்த்திக்கு அனு இம்மானுவேல் ஜோடியாகியுள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இந்தப் படத்தில் கார்த்தியின் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. கடந்த தீபாவளியில் கார்த்தியின் சர்தார் படம் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஈசிஆர் பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் போடப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததாகவும் கார்த்தியின் ஒட்டுமொத்த போர்ஷன்களும் நிறைவடைந்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் இன்னும் சில பேட்ச் வொர்க்குகள் மீதமுள்ளதாகவும் அதுவும் இன்னும் சில தினங்களில் நிறைவடைந்துவிடும் என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.
தற்போது படத்தின் பேட்ச் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் டீசர், பாடல் மற்றும் ட்ரெயிலர் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தப் படத்தின் முந்தைய போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிக்களை கவர்ந்த நிலையில், விரைவில் படத்தின் இசை வெளியீடு குறித்த அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். கார்த்தியுடன் அனு இம்மானுவேல் நடித்துள்ள நிலையில், இவர்களின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் அவரது இசையில் படத்தின் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி இணையவுள்ளார். இந்தப் படத்தில் நடிகை க்ரீத்தி ஷெட்டி கார்த்திக்கு ஜோடியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.