வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கெய்ரோ: அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எகிப்து சென்றடைந்தார். 26 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்து சென்றுள்ள பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்டன் ராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது.

விமான நிலையத்திற்கு வந்த எகிப்து பிரதமர் முஸ்தபா, மோடியை நேரில் வரவேற்றார். அங்கு, எகிப்து அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்கும் மோடி இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

குஜ்ராலுக்கு பின் மோடி
1997-ல் பிரதமராக பதவி வகித்த ஸ்ரீ இந்தர் குமார் குஜ்ரால் (ஐ.கே. குஜ்ரால்) எகிப்து சென்றிருந்தார். 26 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பிரதமர் மோடி எகிப்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்து நாட்டிற்கு பயணித்துள்ள இந்திய பிரதமர்கள்
இந்திய பிரதமராக பதவி வகித்துள்ள நான்கு பேர் எகிப்து நாட்டிற்கு பயணித்துள்ளனர் அதன் விபரம் வருமாறு.
1985-ராஜிவ்
1995-நரசிம்மராவ்
1997- ஐ.கே.குஜ்ரால்
2023- பிரதமர் மோடி
மேற்கண்டவர்களை தவிர பிரதமராக பதவி வகித்திருந்த மன்மோகன்சிங் 2009-ல் எகிப்து நாட்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement