சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14ம் தேதி ரிலீஸாகிறது.
மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் – ஏஆர் முருகதாஸ் இணையும் படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராசி இல்லாத நடிகை ஒருவர் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராசி இல்லாத நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்: சின்ன திரையில் இருந்து சில்வர் ஸ்க்ரீன் வரை வந்தவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்கள் கொடுத்த சிவகார்த்திகேயன், சில வருடங்களாக சரியான சக்சஸ் இல்லாமல் போராடி வந்தார். ஆனால், நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பான கம்பேக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து ரிலீஸான டான் ஓரளவு வரவேற்பைப் பெற்றாலும், பிரின்ஸ் திரைப்படம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்தது. அதற்கும் சேர்த்து மாவீரன் படம் மூலம் செட்டில் செய்துவிடலாம் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறதாம்.
எஸ்கே 21 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணையலாம் என முடிவு செய்துள்ளாராம் சிவகார்த்திகேயன். இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனும் பேசியிருந்தார். மேலும், இந்தப் படத்தை பிரம்மாண்டமாக இயக்கலாம் என ஏஆர் முருகதாஸ் திட்டமிட்டு வருகிறாராம். அதோடு சிவகார்த்திகேயன் ஜோடியாக பான் இந்தியா நடிகை ஒருவரை நடிக்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

அதன்படி, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். மிஷ்கினின் முகமூடி திரைப்படம் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, அதன்பின்னர் டோலிவுட் பக்கம் சென்றுவிட்டார். ரங்கஸ்தலம், சாக்ஷ்யம், மஹரிஷி, ஆலா வைகுந்தபுரமுலோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால், சமீபத்தில் பூஜா ஹெக்டே நடித்த படங்கள் எதுவுமே ஹிட்டாகவில்லை.
பிரபாஸ் ஜோடியாக நடித்த ராதே ஷ்யாம், விஜய்யின் பீஸ்ட், ராம் சரணின் ஆச்சார்யா, சல்மான் கானின் கிசி கா பாய் கிசி கி ஜான் படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவின. இதனால் பூஜா ஹெக்டே மீது ராசியில்லாத நடிகை என்ற முத்திரை விழுந்தது. மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடித்தும் பலனில்லாமல் போன பூஜா ஹெக்டே கடும் விரக்தியில் உள்ளார்.
இந்நிலையில், பூஜா ஹெக்டேவை ஜோடியாக நடிக்க வைத்து சிவகார்த்திகேயன் தனது மார்க்கெட்டை சோலி முடித்துவிடுவார் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மேலும், ஏற்கனவே பல பஞ்சாயத்துகளில் இருக்கும் சிவகார்த்திகேயன் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் எனவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், சிவகார்த்திகேயன் – ஏஆர் முருகதாஸ் படம் பற்றியும், அதில் பூஜா ஹெக்டே நடிப்பது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.