போபால்: மத்திய பிரதேசத்தில், மொரேனா மாவட்டத்தின் ஜவுரா ரோடு என்ற பகுதியில், கிர்வர் சிங் என்பவர் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார்.
இவருடன், கடந்த 21ம் தேதி, முன்னாள் மாணவர்கள் இருவர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த கிர்வர் சிங், குவாலியரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து, போலீசார் கூறியதாவது:
கிர்வர் சிங்கின் டியூஷன் சென்டரில், மூன்று ஆண்டுகளுக்கு முன், இரு மாணவர்கள் பிளஸ் 2 வரை படித்துள்ளனர். அவர்கள், டியூஷன் கட்டணத்தில் பாதி செலுத்தவில்லை.
அந்த மாணவர்களை பார்க்கும் போதெல்லாம், கிர்வர் சிங் டியூஷன் கட்டணம் கேட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள், அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மாணவர்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement