கெய்ரோ : எகிப்து சென்றுள்ள மோடிக்கு, அந்நாட்டு இந்திய வம்சாவளியினர், ‘வந்தே மாதரம்’ கோஷம் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு, ஆப்ரிக்க நாடான, எகிப்துக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.
தலைநகர் கெய்ரோவில் உள்ள, ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலுக்கு சென்ற மோடியை, அந்நாட்டு இந்திய வம்சாவளியினர், இந்திய தேசிய கொடியை அசைத்தபடி, ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘மோடி மோடி’ என, கோஷங்கள் எழுப்பி, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், இந்திய பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளும் நடந்தன ; வரவேற்பளித்த இந்தியர்களிடம், பிரதமர் மோடி வாழ்த்தி, சிறிது நேரம் அவர்களுடன் உரையாடினார்.
![]() |
பின், கெய்ரோவில் உள்ள, ஆயிரம் ஆண்டுகள் பழமையான, அல்-ஹக்கிம் மசூதிக்கு சென்றார். அங்கு, தாவூதி போரா முஸ்லீம்களுடன் உரையாடினார்.
அப்போது,
அவர் பேசுகையில்,’நான், உங்களின் படங்கள், வீடியோக்களை பார்ப்பேன்.
இங்கு, உங்களிடம் ஒரு புகார் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும்,
என்னை ‘மரியாதைக்குரிய பி.எம்.,’ என, அழைக்கிறீர்கள். நான், இங்கு
பிரதமராகவோ அல்லது முதல்வராகவோ வரவில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக
வந்துள்ளேன்,’ என்றார்.
போரா முஸ்லீ்கள், மோடியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்-ஹக்கீம் மசூதியை தொடர்ந்து,
ஹெலியோபோலிஸில் உள்ள போர் நினைவிடத்துக்கு சென்று, முதல்உலகப் போரின்போது,
எகிப்துக்காக போரிட்டு உயிர்தியாகம் செய்த, இந்திய வீரர்களுக்கும், மோடி
அஞ்சலி செலுத்த உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்