What to watch on Theatre & OTT: தலைநகரம் 2, தண்டட்டி – இந்த வாரம் இத்தனைத் தமிழ்ப் படங்களா?

தலைநகரம் 2 (தமிழ்)

தலைநகரம் 2

இயக்குநர் சுந்தர்.சி கதாநயகனாக அறிமுகமாக, வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரத்தின் கலகலப்பான காமெடியுடன் 2006ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘தலைநகரம்’. இப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள திரைப்படம் ‘தலைநகரம் 2’. சுந்தர்.சி, தம்பி ராமையா, யோகி பாபு, பாலக் லால்வானி, ‘பாகுபலி’ பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மூன்று ரவுடிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு காலத்தில் சென்னை தலைநகரிலேயே மிகப்பெரிய ரவுடியாக இருந்த சுந்தர்.சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த ரவுடிகளின் பாதைகளில் குறுக்கிடும் சுந்தர்.சி, அவர்களைச் சமாளித்தாரா, மீண்டும் சென்னை தலைநகரின் ரவுடியாக உருவெடுத்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.

ரெஜினா (தமிழ்)

ரெஜினா

மலையாளத்தில் ‘Paipin Chuvattile Pranayam’, ‘Star’ படங்களை இயக்கிய டொமின் டி.சில்வா இயக்கத்தில் சுனைனா, அனந்த் நாக், நிவாஸ் ஆதித்தன், சாய் தீனா, சரத் அப்பானி உள்ளிட்டோர் நடிப்பில் தமிழில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘Regina’. இத்திரைப்படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அனாதையான ரெஜினா தன் வாழ்வின் மகிழ்ச்சியாய் வரும் தன் காதல் கணவனை இழந்து விடுகிறார். கணவனைக் கொன்ற கொள்ளைக் கும்பலுக்கு உரிய தண்டைனை வழங்க வேண்டும் என நீதி கேட்டுக் காவல் நிலையத்திற்கு அலைந்து மனமுடைகிறாள். ஒருகட்டத்தில் பொறுமையிழக்கும் ரெஜினா, தன் கணவனைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்கத் தனி ஆளாக ஆக்‌ஷன் அவதாரத்தில் களமிறங்குகிறார். இறுதியில், குற்றவாளிகளைக் கண்டுபிடித்துப் பழிவாங்கினாரா, கொலையின் பின்னணி என்ன என்பதுதான் இதன் கதைக்களம்.

பாயும் ஒளி நீ எனக்கு (தமிழ்)

பாயும் ஒளி நீ எனக்கு

கார்த்திக் செளத்ரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, விவேக் பிரசன்னா, வாணி போஜன், தனஞ்சயா, வெற்றி கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. குறைந்த ஒளியில் பார்க்க முடியாத விழிச் சவால் கொண்ட விக்ரம் பிரபு, தன் சித்தப்பாவைக் கொலை செய்த கும்பலைப் பழித்தீர்ப்பதுதான் இதன் கதைக்களம். ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தண்டட்டி (தமிழ்)

தண்டட்டி

ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரில்லர் திரைப்படம் ‘தண்டட்டி’. இத்திரைப்படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

காணாமல் போன மூதாட்டியான தங்கப்பொண்ணைக் கண்டுபிடிக்கக் கோரிய புகாரை விசாரிக்கிறார் பணி ஓய்வுக் காலத்தை நெருங்கும் காவலரான பசுபதி. மூதாட்டியோ கண்டுபிடிக்கப்பட்டவுடன் இறந்துவிடுகிறார். அவரை அடக்கம் செய்ய பசுபதி, காவல் துறையை வெறுக்கும் மூதாட்டியின் ஊருக்குச் செல்கிறார். அங்கு இழவு நிகழ்வில் மூதாட்டியின் தண்டட்டி காணாமல் போய்விடுகிறது. அதை பசுபதி கண்டுபிடித்தாரா, அந்தத் தண்டட்டிக்குப் பின்னால் இருக்கும் உணர்ச்சிகரமானக் கதை என்ன என்பதுதான் இதன் கதைக்களம்.

அஸ்வின்ஸ் (தமிழ்)

அஸ்வின்ஸ்

வெளிநாடு சென்று பேயைப் படம் பிடிக்க முயலும் யூடியூபர்கள் சந்திக்கும் அமானுஷ்ய சம்பவங்களே இதன் கதைக்களம். தருண் தேஜா மல்லாரெட்டி இயக்கத்தில் வசந்த் ரவி, முரளிதரன், விமலா ராமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம். ஹாரர், திரில்லரான் இப்படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அழகிய கண்ணே (தமிழ்)

அழகிய கண்ணே

விஜய்குமார் இயக்கத்தில் லியோ சிவகுமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அழகிய கண்ணே’. இத்திரைப்படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இயக்குநாராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கதாநாயகன் இன்பா, கஸ்தூரி என்ற பெண்ணைக் காதல் செய்து பெற்றோரின் எதிர்ப்பில் திருமணம் செய்து கொள்கிறார். பின்னர், இருவரும் சொந்த ஊரான திண்டுக்கல்லில் இருந்து சென்னை வந்து வாழத் தொடங்குகிறார்கள். அப்போது கஸ்தூரியின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கஸ்தூரியைக் கொலை செய்ய முயற்சி செய்கிறார். அதிலிருந்து இருவரும் தப்பித்தார்களா, இல்லையா என்பதுதான் இதன் கதை.

நாயாடி (தமிழ்)

நாயாடி

ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கி நடிக்க, அவருடன் வி.ரவிச்சந்திரன், மாளவிகா மனோஜ், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரர், திரில்லர் திரைப்படமான இது நேற்று (ஜூன் 23-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

வேட்டையாடு விளையாடு (தமிழ்) – (Re Release)

வேட்டையாடு விளையாடு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 2006ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மீண்டும் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் 4k ஃபார்மேட்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Dhoomam (மலையாளம்/கன்னடம்)

Dhoomam

‘Lucia’, ‘U Turn’ போன்ற திரைப்படங்களை இயக்கிய பவன் குமார் இயக்கத்தில் ஃபகத் பாசில், அபர்ணா பாலமுரளி, ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ‘Dhoomam’. சிகரெட் கம்பெனியில் பணிபுரியும் ஃபகத் பாசில் சிகரெட்டால் பல இளம் குழந்தைகள் பாதிக்கப்படுவதை உணர்ந்து தனது பணியை ராஜினாமா செய்துவிடுகிறார். இது அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது, சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களின் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்பது இப்படத்தின் கதைக்களம். மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Elemental (ஆங்கிலம்)

Elemental

வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் ‘Monsters University’, Lightyear’ படங்களின் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்த பீட்டர் சோன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Elemental’. மாயாஜாலங்கள் நிறைந்த அனிமேஷன், அட்வென்சர் திரைப்படமான இது ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

No Hard Feelings (ஆங்கிலம்)

No Hard Feelings

ஜீன் ஸ்டுப்னிட்ஸ்கி இயக்கத்தில் ஜெனிபர் லாரன்ஸ், ஆண்ட்ரூ பார்த் ஃபெல்ட்மேன், லாரா பெனான்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘No Hard Feelings’. இளம் வயது காதல் ஜோடிகளின் வாழ்க்கையில் நடக்கும் காமெடியான சம்பவங்களே இதன் கதைக்களம். காமெடி ஜானர் திரைப்படமான இது ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்:

Kerala Crime Files (மலையாளம்) – Disney Plus Hotstar

Kerala Crime Files

அகமது கபீர் இயக்கத்தில் லால், அஜு வர்கீஸ், நவாஸ் வல்லிக்குன்னு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Kerala Crime Files’. கேரளாவில் லாட்ஜ் ஒன்றில் நடந்த கொலையும், அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களையும் பற்றிய க்ரைம் திரில்லர் தொடர் இது. இந்த வெப்சீரிஸ் ஜூன் 23ம் தேதி ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Tiku Weds Sheru (இந்தி) – Amazon Prime Video

Tiku Weds Sheru

சாய் கபீர் இயக்கத்தில் நவாசுதீன் சித்திக், அவ்னீத் கவுர், ராகுல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி, காதல் திரைப்படம் ‘Tiku Weds Sheru’. இத்திரைப்படம் ஜூன் 23ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் கிராமத்திலிருந்து மும்பை வருகிறார் கதாநாயகி அவ்னீத் கவுர். அவருக்கும் அங்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பணிபுரியும் நவாசுதீனுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்கள் கனவை நோக்கிப் பயணிக்கிறார்கள். இவற்றுக்கு இடையில் இருவருக்குமிடையே நடக்கும் சண்டைகள்தான் இப்படத்தின் கதை.

Take Care of Maya (ஆங்கிலம்) – Netflix

Take Care of Maya

10 வயது குழந்தையான மாயா அரிய வகை நோயால் பாதிக்கப்படுகிறார். இதனைக் கண்டறிய மருத்துவர்கள் அவரது பெற்றோர்களை விசாரிக்கிறார்கள். அதன்பின் மாயாவை அவரது பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனையிலிருந்து யாருக்கும் தெரியாமல் கூட்டிச் சென்று விடுகிறார்கள். இறுதியில், மாயாவின் நோய்க்கான காரணம் என்ன, பெற்றோர்களின் தவறு என்ன என்பதுதான் இதன் கதைக்களம். இது ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஹென்றி ரூஸ்வெல்ட் இயக்கத்தில் கெய்ட்லின் கீட்டிங், ஜான் பார்டின், கேட் பாரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஜூன் 19ம் தேதி வெளியாகியுள்ளது.

Jagged Mind (ஆங்கிலம்) – Netflix

Jagged Mind

கெல்லி கலி இயக்கத்தில் ரிச்சர்ட்சன், ஷன்னன் வுட்வர்டு, ரோஷலின் எல்பே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர், திரில்லர் ஆங்கில திரைப்படம் ‘Jagged Mind’. பில்லி என்ற பெண் ஒரு மர்மமான காதலியுடன் டேட்டிங் செய்யத் தொடங்கும் போது தன் காதலி மனநலப் பிரச்னைகளாலும், சில மர்மமான விஷயங்களாலும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதனால் இருவருக்கும் என்ன நடந்தது, இதற்கான பின்னணி என்ன என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் இந்தியாவில் ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் ஜூன் 23ம் தேதி வெளியாகியுள்ளது.

The Perfect Find (ஆங்கிலம்) – Netflix

The Perfect Find

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஜென்னாவிற்கு ஒரு இளைனுடன் காதல் ஏற்படுகிறது. பின்னர் தன் காதலன் தன்னுடைய பாஸின் மகன் என்பது தெரிய வர, தன் காதலை பாஸுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்கிறார். இது பாஸுக்குத் தெரிந்ததா, இவர்களின் காதல் என்ன ஆனது என்பதுதான் இதன் கதைக்களம். காதல், காமெடி ஜானர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஜூன் 23ம் தேதி வெளியாகியுள்ளது.

World’s Best (ஆங்கிலம்) – Disney+ Hotstar

World’s Best

கணிதத்தில் சிறந்து விளங்கும் சிறுவன், ராப் சிங்கராக வேண்டும் என்ற தன் தந்தையின் கனவை நினைவாக்க விடாமுயற்சியுடன் போராடுகிறார். இறுதியில் தன் கனவையும், தனது தந்தையின் கனவையும் அச்சிறுவன் எப்படி நிறைவேற்றினார் என்பதே இப்படத்தின் கதைக்களம். இத்திரைப்படம் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் ஜூன் 23ம் தேதி வெளியாகியுள்ளது.

வெப்சீரிஸ்: 

Secret Invasion (ஆங்கிலம்) – Disney+ Hotstar

Secret Invasion

மார்வெல்லின் தயாரிப்பில் கைல் பிராட்ஸ்ட்ரீட் ஆக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் ஹீரோ ஆக்‌ஷன், அட்வென்சர் வெப்சீரிஸ் ‘Secret Invasion’. சாமுவேல் எல். ஜாக்சன், பென் மெண்டல்சோன், கோபி ஸ்மல்டர்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் ஜூன் 21ம் தேதி முதல் வாரம் ஒரு எபிசோடு என வெளியாகிறது.

Class of ’09 (ஆங்கிலம்) – Disney+ Hotstar

Class of ’09

டாம் ராப் ஸ்மித் ஆக்கத்தில் பிரையன் டைரி ஹென்றி, கேட் மாரா, பிரையன் ஜே. ஸ்மித் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் Class of ’09. க்ரைம், ஆக்‌ஷன், திரில்லர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் ஜூன் 21ம் தேதி முதல் வெளியாகிறது.

Glamorous (ஆங்கிலம்) – Netflix

Glamorous

ஜோர்டன் நார்டினோ இயக்கத்தில் கிம் கேட்ரல், மிஸ் பென்னி, ஜேட் பேட்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Glamorous’. மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டின் வாழ்வை காமெடியுடன் எடுத்துச் சொல்லும் இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஜூன் 22ம் தேதி வெளியாகி இருக்கிறது.

Skull lsland (ஆங்கிலம்) – Netflix

Skull lsland

பிரையன் டஃபீல்ட் ஆக்கத்தில் நிக்கோலஸ் கான்டு, மே விட்மேன், டேரன் பார்னெட் உள்ளிட்டோர் நடிப்பில் (குரலில்) உருவாகியுள்ள அனிமேஷன் வெப்சீரிஸ் இது. கொடூர மிருகங்கள் நிறைந்த தனித்தீவில் மாட்டிக் கொண்ட இளைஞன் அங்கிருந்து எப்படி தப்பித்தான் என்பதுதான் இதன் கதைக்களம். ஆக்‌ஷன், அட்வென்சர், காமெடி நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஜூன் 22ம் தேதி வெளியாகி இருக்கிறது.

Sleeping Dog (ஜெர்மன்) – Netflix

Sleeping Dog

ஆடம் கூப்பர் ஆக்கத்தில் ஸ்டெஃபென் மென்னெக்ஸ், சாண்ட்ரா பெர்டலான்ஃபி, எக்ஸோனா ஃபெடாஹாஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெர்மன் மொழி வெப்சீரிஸ் ‘Sleeping Dog’. க்ரைம், திரில்லர், மர்மங்கள் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Netflix’ ஓடிடி தளத்தில் ஜூன் 22ம் தேதி வெளியாகி இருக்கிறது.

தியேட்டர் டு ஓடிடி:

பிச்சைக்காரன் 2 (தமிழ்)Disney+ Hotstar

பிச்சைக்காரன் 2

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்தின் வெற்றியை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கழுவேத்தி மூர்க்கன் (தமிழ்) – Amazon Prime Video

கழுவேத்தி மூர்க்கன்

சாதிவெறிக்கு எதிரான ரிவென்ஜ் ஸ்டோரியாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ திரைப்படத்தை இயக்கிய சை.கெளதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

காசேதான் கடவுளடா (தமிழ்) – SunNXT

காசேதான் கடவுளடா படத்தில்

‘The Great Indian Kitchen’ படத்தைத் தமிழில் எடுத்த ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காசேதான் கடவுளடா’. இது அதே பெயரில் தேங்காய் சீனிவாசன், முத்துராமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிளாசிக் நகைச்சுவை திரைப்படத்தின் ரீமேக். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘SunNXT’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Malli Pelli (தெலுங்கு) – Aha

Malli Pelli

திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பிரபல நடிகரான கதாநாயகன், தன்னுடன் நடிக்கும் திருமணமான சக நடிகையுடன் காதல் கொள்கிறார். இருவர்களுக்கும் இடையேயான காதலையும், அதுசார்ந்த பிரச்னைகளையும் மையமாகக் கொண்டது இத்திரைப்படம். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைபடம் தற்போது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Thrishanku (மலையாளம்) – Netflix

Thrishanku

அச்யுத் விநாயக் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன், அன்னா பென், சிவ ஹரிஹரன் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த மலையாள திரைப்படம் ‘Thrishanku’. காதல் ஜோடிகள் தங்களின் வீட்டிற்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முயலவதுதான் இப்படத்தின் கதைக்களம். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைபடம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Kisi Ka Bhai Kisi Ki Jaan (இந்தி) – Zee5

Kisi Ka Bhai Kisi Ki Jaan

ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ் டக்குபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி திரைப்படம் ‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைபடம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது அஜித்தின் ‘வீரம்’ படத்தின் ரீமேக்.

The Kerala Story (இந்தி) – Zee5

The Kerala Story

‘ஆஸ்மா’, ‘தி லாஸ்ட் மாங்க்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சுதிப்தோ சென் இயக்கத்தில் மே 5ம் தேதி இந்தியா முழுவதும் பல மொழிகளில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. திரையரங்குகளில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளான இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.