அந்தரங்கத்தை ஊடகத்தில் பேச கேவலமாக இல்லையா? கொந்தளித்த ராஜலெட்சுமி

சூப்பர் சிங்கர் பிரபலமான ராஜலெட்சுமி, சின்னத்திரை ஜோடியாக இருந்து பிறகு பிரிந்த விஷ்ணுகாந்த் – சம்யுக்தா விவகாரம் குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார். கணவன், மனைவி தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை சோஷியல் மீடியாவில் பேசுவது முறையா? என்று கேட்டுள்ள ராஜலெட்சுமி, 'தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகத்தில் கொண்டு வந்து பேசுவது கேவலம். இதற்கு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், பக்குவமில்லாமல் பேசி அடுத்தவர்களின் அனுதாபத்தை பெற துடிக்கிறார்கள்' என இருவரையும் லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். இதனையடுத்து ராஜலெட்சுமியின் கருத்தை ஏற்றுக்கொண்ட பலரும், சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும் பிரச்னையை தீர்க்க முயலாமல் மாறி மாறி சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்டு வருவதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.