பெய்ஜிங்கில் செம சூடு… தாங்க முடியல… 9 வருஷத்துக்கு அப்புறம் கதறும் மக்கள்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
சீனா என்றாலே கொரோனா வைரஸ் தான் பலருக்கும் நினைவில் தோன்றி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. 21ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த உலகும் இப்படி ஒரு துயரை அனுபவித்ததே இல்லை. இந்நிலையில் புதிதாக ஒரு வைரல் செய்தி சீனாவில் இருந்து வைரலாகி வருகிறது. விஷயம் இதுதான். மோசமான வானிலை. வெப்பம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.

சீனாவின் வெப்ப அலைகள்

கடந்த வாரம் வடக்கு சீனாவில் வெப்பம் வாட்டி வதைத்தது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு சீனா பக்கம் வெயிலின் தாக்கம் திரும்பியது. பின்னர் தென் சீனாவில் ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்தது. பெய்ஜிங், தியான்ஜின், ஹெபேய், ஷான்டாங் ஆகிய நகரங்களை சுட்டி காட்டலாம். இதையொட்டி வானிலையின் இரண்டாவது அதிகபட்ச எச்சரிக்கையான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது.

மோடி – எலான் மஸ்க் சந்திப்பு… இந்தியாவிற்கு வரும் டெஸ்லா… கூடவே பெரிய சர்ப்ரைஸ்!

பெய்ஜிங் வானிலை

ஜூன் 22 முதல் 25 வரை படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தலைநகர் பெய்ஜிங் நகரில் கடந்த வியாழன் அன்று 40 டிகிரி செல்சியஸை தாண்டி விட்டதாம். வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, பெய்ஜிங்கில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்ப அலைகளால் சீன மக்கள் தவியாய் தவித்தனர்.

சீன அரசு எச்சரிக்கை

2014ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறை வெப்பம் இந்த அளவிற்கு அதிகரித்துள்ளது. சரியாக வேண்டுமெனில் மே 29, 2014 அன்று 40 டிகிரி வெப்பநிலை முதல்முறை பதிவாகி மிரட்டியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

தியான்ஜிங் நகரில் ஏசி பயன்பாடு

வெயில் அதிகம் இருப்பதால் வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தியான்ஜின் துறைமுக நகரில் வெயிலின் தாக்கம் காரணமாக ஏசி பயன்பாடு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மின் தேவையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்நாட்டு அரசு ஆளாகியுள்ளது.

ரஷ்யா கையிலெடுத்த அணு ஆயுதங்கள்… பெலாரஸில் மெகா வியூகம்… பதறிப் போன உலகம்!

டிராகன் படகு திருவிழா

சீனாவில் டிராகன் படகு திருவிழா ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ளது. இது வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதுதவிர மாங்கோலியாவின் உட்புற பகுதிகள், ஜின்ஜியாங் உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.