மேற்கு வங்கம்: இரு சரக்கு ரயில்கள் பயங்கர மோதல்-12 பெட்டிகள் தடம் புரண்டன-ஒரு ஓட்டுநருக்கு காயம்!

பங்குரா: மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இவ்விபத்தில் ஒரு ஓட்டுநருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,

மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகே ஒண்டா ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதனையடுத்து ரயில் பெட்டிகளை மீட்டு பாதையை சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விபத்தில் ஒரு சரக்கு ரயில் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவ்விபத்தால் காரக்பூர்- பங்குரா- ஆத்ரா மார்க்கத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

West Bengal: Two goods trains collided near Bankura

இந்த விபத்தைத் தொடர்ந்து 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; 3 ரயில்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளன.


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.