சென்னை: விஜய் டிவியின் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா 2 மாறியுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்தத் தொடர் துவங்கப்பட்டது.
முன்னதாக கடந்த பிப்ரவரியில் இந்தத் தொடரின் முதல் சீசன் நிறைவடைந்த நிலையில், உடனடியாக சீரியலின் இரண்டாவது சீசன் துவங்கப்பட்டது.
முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் கிராமத்து பின்னணியில் இந்தத் தொடர் தற்போது அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது.
பாரதிக்கு வெண்பாவை திருமணம் செய்ய சவுந்தர்யா முடிவு: விஜய் டிவியின் முன்னணித் தொடர்களின் வரிசையில் பாரதி கண்ணம்மா தொடருக்கு முக்கியமான இடம் உண்டு. இந்தத் தொடரின் முதல் சீசன் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டது. தொடரின் பாரதி, கண்ணம்மா, வெண்பா, சவுந்தர்யா என கேரக்டர்களின் பெயர்கள் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தது. இந்நிலையில் இந்த சீரியலின் பல மாற்றங்கள் தொடரை பின்னுக்கு தள்ளிய நிலையில், கடந்த பிப்ரவரியில் இந்தத் தொடர் நிறைவு பெற்றது.
தொடர்ந்து சில தினங்களிலேயே பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர் துவங்கப்பட்டது. முதல் சீசனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கேரக்டர்கள், கதையம்சம் மற்றும் கதைக்களத்தில் இந்தத் தொடர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆனாலும் கேரக்டர்களின் பெயர்களை மட்டும் இயக்குநர் இரண்டாவது சீசனிலும் பயன்படுத்தி வருகிறார். கிராமத்து சூழலை, இந்த சீரியலில் அவர் பயன்படுத்தியுள்ளார்.
வீட்டிற்கு அடங்காமல் சுற்றித்திரியும் பாரதியை கண்ணம்மாவின் காதல் சிறப்பானவராக மாற்றுகிறது. தொடர்ந்து கண்ணம்மாவின் காதலை பெறுவதற்காக பிரம்மபிரயத்தனம் செய்கிறார். ஆனால் கண்ணம்மாவோ, தன்னுடைய தந்தையின் வார்த்தை, பாரதியின் தாய் சவுந்தர்யாவின் விருப்பம் மற்றும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கை போன்றவற்றை கருத்தில் கொண்டு, பாரதியின் காதலை ஏற்க மறுக்கிறார்.

ஆனாலும் பாரதியின் தொடர் அன்பு அவரை மாற்றுகிறது. கண்ணம்மாவிற்கும் பாரதியின்மீது காதல் இருந்தாலும் முன் குறிப்பிட்ட விஷயங்களுக்காக அவரது காதலை ஏற்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது பாரதியின் காதலை ஏற்றுக் கொண்ட கண்ணம்மாவிடம், ரொமான்ஸ் மழை பொழிகிறார் பாரதி. தாங்கள் 60 வயதில் எப்படி இருப்போம் என்பது வரை அவரது ஆசை மற்றும் விருப்பம் செல்கிறது.
ஆனால் அவரது வீட்டில் கதை வேறு மாதிரியாக இருக்கிறது. தன்னுடைய அத்தை சவுந்தர்யாவை தீ விபத்திலிருந்து காப்பாற்றும் வெண்பாவிற்கு கண்ணத்தில் தீக்காயம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தும், முழுமையாக சரியாகாத நிலையில், தன்னுடைய அத்தையை ஏமாற்றி, அவரது மகனான பாரதியை திருமணம் செய்துக் கொள்ளவும் அதன்மூலம் அவர்களது சொத்துக்களை அடையவும் சதித்திட்டம் தீட்டுகிறார் வெண்பா.
அதற்கேற்ப தன்னை பெண் பார்க்க போலியான நபர்களை வரவழைத்து, அவர்கள் தன்னை நிராகரிக்குமாறு செய்கிறார். தொடர்ந்து தற்கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். ஆனால் அவரை போராடி மீட்கின்றனர் குடும்பத்தினர். இதையடுத்து, தன்னுடைய மகன் பாரதியை வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க தான் முடிவு செய்துள்ளதாக சவுந்தர்யா கூறுகிறார். இதனால் வெண்பாவின் சதி வெற்றி பெறுகிறது. இதனிடையே, நீண்ட முயற்சிக்கு பிறகு கண்ணம்மாவின் காதலை பெற்ற பாரதியின் நிலை என்னவாகும் என்பதே தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இவ்வாறாக இந்த வார ப்ரமோ காணப்படுகிறது.