ஷிவமொகா: வீட்டுக்குள் கஞ்சா செடி பயிரிட்டததாக, கர்நாடகாவில் இரண்டு மருத்துவ மாணவர்கள் உட்பட, ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா ஷிவமொகாவில் மருத்துவ மாணவர்கள் சிலர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் ஸ்கூட்டரில் சுற்றிய ஒரு மாணவி மற்றும் மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஸ்கூட்டர் டிக்கியை திறந்து பார்த்தபோது, ஒரு பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில், விஜயபுராவின் அப்துல்லா கயிம், 25, பல்லாரியின் அர்பிதா, 24, என்பதும், ஷிவமொகா மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படித்ததும் தெரிந்தது.
இவர்கள் ஷிவமொகாவில் வசித்து வந்த வாடகை வீட்டிலேயே கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோல, உடுப்பி டவுன் மணிப்பால் பகுதியில் கஞ்சா விற்றதாக கல்லுாரி மாணவர்களான நிவிஷ், 21, அமல், 22, உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
 
Advertisement
 
		