சென்னை: வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமலினி முகர்ஜி தற்போது எப்படி இருக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படம் ரீமாஸ்டரிங் செய்யப்பட்டு தற்போது தியேட்டர்களில் இந்த வாரம் வெளியான படங்களுக்கு சிம்ம சொப்பனாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ஓடி வருகிறது.
அந்த படத்தில் நடித்த ஜோதிகா இப்போதும், அந்த படத்தில் பார்த்ததை போலவே கடுமையாக வொர்க்கவுட் செய்து ஸ்லிம்மாக உள்ளார். ஆனால், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு பருமனாக மாறி உள்ளார் கமலினி முகர்ஜி.
நடிகை கமலினி முகர்ஜி: நடிகை ரேவதி இந்தியில் இயக்கிய பிர் மிலேங்கா படம் 2004ல் வெளியானது. இந்த படத்தில் ஷில்பா ஷெட்டி லீடு ரோலில் நடித்திருந்தார். சல்மான் கான் கேமியோ செய்திருந்தார். அபிஷேக் பச்சனும் நடித்திருந்த இந்த படத்தில் தான் அறிமுகமானார் கமலினி முகர்ஜி.
அதன் பின்னர் தெலுங்கில் வெளியான ஆனந்த் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர், 2006ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் கமலின் மனைவியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார்.

பார்த்த முதல் நாளே: வேட்டையாடு விளையாடு படம் மீண்டும் ரிலீஸாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற பார்த்த முதல் நாளே பாடலில் நடிகை கமலினி முகர்ஜி கமலுடன் செம கெமிஸ்ட்ரியுடன் நடித்திருப்பார்.
ஐஸ்வர்யா ராய் போல பெண் வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் திடீரென கமலினி முகர்ஜி போல பெண் வேண்டும் எனக் கேட்கும் அளவுக்கு டோட்டலாக இவர் பக்கம் சாய்ந்தது.

கடைசியாக இறைவி படத்தில்: வேட்டையாடு விளையாடு படத்திற்கு பின்னர் தமிழில் காதல்னா சும்மா இல்லை படத்தில் நடித்த கமலினி முகர்ஜி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.
கடைசியாக தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா நடித்த இறைவி படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் கன்னத்தில் பளார் என அறை விட்டு அவருக்கு மனைவியாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சினிமாவில் இருந்து விலகல்: அதன் பின்னர் மோகன்லால் உடன் இறைவி படம் வெளியான அதே 2016ம் ஆண்டு புலி முருகன் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகிய கமலினி முகர்ஜி அமெரிக்காவில் போய் செட்டில் ஆகி விட்டார்.
சமீபத்தில், அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓவர் வெயிட் போட்டு அடையாளமே தெரியாத அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமலினியை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். வேட்டையாடு விளையாடு படத்தில் பார்த்த நடிகையா இப்படி மாறிவிட்டார் என ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர்.