வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஏழைகளின் பசியை போக்குவதற்காக துவக்கப்பட்ட பொதிசோறு திட்டம் தற்போது வெகு பிரபலமாகி வருகிறது.
![]() |
கேரள மாநிலத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஏழைகளின் பசியை போக்குவதற்காக துவக்கப்பட்டது. இருதயப்பூர்வ பொதிச்சோறு திட்டம்.2017 ம் ஆண்டில் ஒரு சில இளைஞர்களின் முயற்சியால் துவங்கப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் 300 பொட்டலங்களுடன் துவக்கப்பட்ட இத்திட்டம் தற்போது பொட்டலங்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இத்திட்டத்தில் சேருபவர்கள் யாருக்கு உணவு வழங்குகிறோம் என்பதை அறியாதவர்கள். மேலும் இதற்காக கூடுதல் சிரமத்தை எதையும் செய்யாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவைப்படும் உணவுடன் கூடுதலாக ஒரு கைப்பிடி அரிசியை சேர்க்கின்றனர். அவ்வளவு தான்.
ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு குடும்பத்திலும் மதிய உணவு தயார் செய்யும் போது இத்திட்டத்திற்காக தன்னார்வத்துடன் கூடுதல் உணவு தயாரிக்கப்பட்டு பார்சல் செய்யப்படுகிறது. பார்சல் தயாரானவுடன் இப்பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வீடுதேடி வந்து பெற்று செல்கின்றனர். இது போன்று பல குடும்பத்தை சேர்ந்தவர்கள் தயாரி்த்து வழங்கும் இந்த உணவு பொட்டலங்கள் முகம் தெரியாதவர்களின் பசியை போக்குகிறது என்பது நிதர்சனம். அதே நேரத்தில் அடுத்தவரின் பசியை போக்குகிறோம் என்ற திருப்தி உணவு தயாரித்து வழங்குபவர்களுக்கு ஏற்படுகிறது.
![]() |
இத்திட்டம் முதன்முறையாக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துவக்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் வியாபித்துள்ளது.
இது குறித்து ராஜ்யசபா எம்,பி.,ரஹீம் கூறுகையில் இத்திட்டத்திற்காக தனி சமையல் அறை கிடையாது. அனைத்து சாப்பாட்டு பொட்டலங்கள் தனிப்பட்ட வீடுகளில் இருந்து வருகின்றன. ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஆதரவு முலம் பொதிசோறு விநியோகம் நடைபெறுகிறது,. ஒருவருக்கான உணவு கேட்டால் , பல குடும்பங்கள் மூன்று பேருக்கான உணவை தயாரிக்கின்றன. என்றார்.
மேலும் அவர் கூறுகையில் இந்த அவசரகால கட்டத்தில் இளைஞர்கள் சுயநலம் நிறைந்த சூழலில் வளர்கின்றனர். இத்தகைய முயற்சியின் மூலம் அவர்கள் தங்கள் வாழ்நாளில் சந்தித்திராத பசியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்க முன் வருகின்றனர். என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement