Prime Minister Narendra Modi visits Al-Hakim Mosque in Cairo, Egypt | எகிப்தில் ஆயிரம் ஆண்டு பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கெய்ரோ: அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் கெய்ரோவில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அல் ஹகீம் மசூதியை பார்வையிட்டார்.

latest tamil news

மசூதியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பொருட்கள், புகைப்படம் ஆகியவற்றை பார்வையிட்டார். மோடியை வரவேற்ற மசூதி நிர்வாகத்தினர், அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.

latest tamil news

பிறகு, மசூதியில் இருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

latest tamil news

மரியாதை

இதனை தொடர்ந்து ஹெலியாபொலிஸ் போர் நினைவிடம் சென்ற மோடி, அங்கு முதல் உலகப்போரில் வீரமரணம் அடைந்த 3,727 இந்திய வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பேச்சுவார்த்தை

முன்னதாக இன்று இந்திய நேரப்படி காலை, எகிப்து பிரதமர் முஸ்தபாவை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு, அந்நாட்டு தொழிலதிபர்களையும் மோடி சந்தித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.