Taj : Reign of Revenge: முகாலய அரியணை.. சூழ்ச்சி நிறைந்த ஓர் கசப்பான கதை!

Rating:
3.5/5

Taj : Reign of Revenge

இயக்குனர் : ரொனால்ட் ஸ்கால்பெல்லோ

நடிகர்கள் : நசீருதீன் ஷா,தர்மோந்திரா, ஆஷிம் குலாட்டி,மெஹ்ருனிசா

OTT– ஜீ5

சென்னை: இயக்குனர் ரொனால்ட் ஸ்கால்பெல்லோ இயக்கத்தில் உருவான ‘Taj : Divided By Blood’ வலைத் தொடரைத் தொடர்ந்து அதன் இரண்டாவது சீசன் Taj : Reign of Revenge என்ற தொடர் கடந்த மாதம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

இதில், நசீருதீன் ஷா, தர்மோந்திரா, ஆஷிம் குலாட்டி, மெஹ்ருனிசா மற்றும் சலீமின் மகனாக குஸ்ரு மற்றும் குர்ரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

தாஜ் டிவைடட் பை பிளட்: தாஜ் முதல் சீசனில், அக்பர் (நசீருதீன் ஷா) ராஜ்யத்தை தனக்கு பிறகு, தகுதியான மகனுக்கு கொடுக்க ஆசைப்படுகிறார். ஆனால், அக்பரின் மூன்று மகன்களுக்கும் ராஜ்யத்தின் மீது ஆசை வந்து சதி, கொலை, துரோகம்,வன்மம் என அனைத்தையும் செய்து ராஜ்யத்தை பிடிக்க திட்டமிட்டமிடுகிறார்கள்.

ஆசைநாயகி மீது காதல்: மகுடத்தின் மீதும் ராஜ்யத்தின் மீதும் ஆசை இல்லாமல் பெண் பித்தனாக இருந்த அக்பரின் மூத்த மகன் சலீம். தனது தந்தையின் ஆசைநாயகி அனார்கலியின் மீதே காதல் வயப்படுகிறான். இறுதியில், அனார்கலி கொல்லப்பட்டு சலீம் நாடுகடத்தப்படுகிறார். இதுதான் தாஜ் தாஜ் டிவைடட் பை பிளட் முதல் சீசனின் கதை.

Taj : Reign of Revenge: இதன் இரண்டாம் சீசன் Taj : Reign of Revenge என்ற அண்மையில் வெளியாகி உள்ளது. இதில் 15 ஆண்டுகளுக்குபின் என சில நிமிட ரீகேப் மாண்டேஜூடன் இரண்டாவது சீசன் தொடங்குகிறது. இதில் நாடு கடத்தப்பட்ட சலீம் லாகூரில் தஞ்சம் அடைந்து அங்கிருந்து கொண்டே அக்பரை எதிர்கிறார். மேலும், சலீமை ராஜ்யத்தின் ராஜாவாக்க நூர் ஜஹான் (மெஹ்ருனிசா) முயற்சி செய்கிறார். இதற்கு சலீமின் அம்மாவும் ஜோதா உடந்தையாக இருந்து முகலாயப் பேரரசின் அரசனாக தனது மகனை ஆக்க அக்பரை சமாதானப்படுத்தி அழைத்து வருகிறார்.

மொத்தக்கதை: இறுதியில் அக்பரின் சிம்மானம் யாருக்கு கிடைத்தது என்பதே Taj : Reign of Revenge இரண்டாம் சீசன் மொத்த கதை. மிகப்பெரும் பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள இந்த சீசன் 8 எபிசோடுகளைக் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு எபிசோடும் அரைமணி நேரத்திற்கு மேல் உள்ளது. ஆனால் முதல் சீசனை ஒப்பிடுகையில் இதில் சில ஏமாற்றங்கள் உள்ளன.

Naseeruddin shah starrers Taj: Reign Of Revenge Season 2  review in tamil

மும்தாஜ் ஷாஜகான்கதை: இந்த சீசனின் மெய்சிலிர்க்க வைத்த விஷயம் என்னவென்றால் மும்தாஜின் மீது இருந்த காதலால் ஷாஜகானின் தாஜ்மஹால் கட்டிய கதையை நாம் படித்து இருக்கிறார். அந்த மும்தாஜ் யார்? இருவருக்கும் எப்போது காதல் வந்தது, தாஜ்மஹாலை கட்டவடிவமைத்தது எப்போது என்ற வரலாறும் இதில் உள்ளது.

அசாத்திய நடிப்பு: இந்த சீசனில் ஷேக் சலீம் சிஸ்டியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா நடித்துள்ளார். அவரின் மேக்கப், உடை அவரின் கம்பீரமான குரல் இந்த தொடருக்குமேலும் வலு சேர்த்தது என்று சொல்லலாம். பேரரசர் அக்பராக நடித்த நசீருதீன் ஷா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த சீசனிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். துரோகம், துஷ்பிரயோகம், வீண், சூழ்ச்சி நிறைந்த ஓர் கசப்பான கதை Taj : Reign of Revenge.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.