கோவை: பெங்களூருவின் யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வழியாக கண்ணூர் நோக்கி சென்ற ரயில், பாலக்காடு அருகே வாளையார் ரயில் நிலையத்தில் திடீரென நின்றது. ரயிலை என்ஜின் டிரைவர் நிறுத்தி விட்டு, இறங்கி சென்றதால் 2½ மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் அவதி அடைந்தனர்.
பெங்களூருவில் இருந்து பல்வேறு ரயில்கள் கேரளாவிற்கு கோவை வழியாக செல்கின்றன. பெங்களூருவின் யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வழியாக கண்ணூருக்கு ரயில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ரயில் பெங்களூரு எஸ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது. அங்கு ½ மணி நேரம் ரயில் நின்றிருக்கிறது.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாலக்காட்டை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. பாலாக்காட்டை ஒட்டி உள்ள வாளையார் ரயில்வே ஸ்டேசனில் காலை 6 மணிக்கு எஸ்வந்த்பூர் ரயில் திடீரென நின்றுள்ளது. ஆனால், அந்த ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த அனுமதி கிடையாது. சிக்னலுக்காக ரயில் நிற்கிறதா அல்லது வேறு காரணமாக என்பது தெரியாமல் பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நீண்ட நேரமாக ரயில் அங்கு நின்றதால் என்ன ஆச்சு என்று என்ஜினை நோக்கி சென்று போய் பார்த்தனர். அங்கு லோகோ பைலட் இல்லை.
அங்கு ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஏன் ரயில் நிற்கிறது என்று கேட்டுள்ளனர். அவர்கள் இந்த ரயில் நிலையத்தில் ரயில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. வெகு நேரமாகியும் புறப்பட வில்லை என்றே கூறியுள்ளது. லோகோ பைலட் எங்கே போனார் என்று தெரியாமல் தவித்த ரயில் பயணிகள், பாலக்காடு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் என்ஜின் டிரைவர் உடல்நிலை சரியில்லாததால் ரயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்றது தெரியவந்தது. இதனால் பயணிகள் வெகு நேரம் ரயிலில் காத்திருந்ததும் தெரியவந்தது. பொதுமக்கள் பாலக்காடு சென்று இருந்தால் கூட எதிலாவது ஏறி போயிருக்க முடியும். இப்படி நடுக்காட்டில் நிறுத்திவிட்டாரே என்று புலம்பியடிப இருந்தனர். இந்நிலையயில் சுமார் 2.5 மணி நேரத்திற்கு பாலக்காட்டில் இருந்து மற்றொரு என்ஜின் டிரைவர் வரவழைக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2½ மணி நேரம் தாமதமாக காலை 8.30 மணிக்கு வாளையார் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் பாலக்காடு நோக்கி புறப்பட்டு சென்றது. என்ஜின் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தி விட்டு சென்றனர். அந்த வழித்தடத்தில் வந்த பிற ரயில்களும் 2½ மணி நேரம் வாளையார் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நின்றனர். இதனால் கேரளா வழித்தடத்தில் நேற்று ரயில் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். உடல் நிலை சரியில்லாததால் திடீரென ரயிலை இன்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) ரயிலை நிறுத்திவிட்டு சென்றதால் நேற்று கேரளா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.