ஏர்டெல் நிறுவனம் 35 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் இந்த திட்டம் பற்றிய தகவலை டெலிகாம் டாக் முதலில் அளித்துள்ளது. ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் காலிங் கிடைக்கும்.
Airtel 289 ருபாய் கொண்ட திட்டம்
குறிப்பாக குறைந்த விலையில் நீண்ட கால வேலிடிட்டியை விரும்புபவர்களுக்காக ஏர்டெல் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை 289 ரூபாயாக வைக்கப்பட்டுட்டள்ளது. ஏர்டெல்லின் இந்த ரூ.289 திட்டத்தில் 35 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் காலிங் அனைத்து நெட்வொர்க்குகளிலும் கிடைக்கிறது. ஆனால் இதில் 4 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 300 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.
Airtel 199 ரூபாய் கொண்ட திட்டம்
நீண்ட வேலிடிட்டியாகும் மற்றொரு திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஏர்டெல்லும் ரூ.199க்கான திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது தவிர, ஏர்டெல்லின் இந்த திட்டத்தில், மொத்தம் 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்களுடன் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
இந்த இரண்டு திட்டத்தில் இருக்கும் வித்தியாசம் என்ன?
இந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி தன்மையில் ஐந்து நாட்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது, ஆனால் இது தவிர மற்றொரு பெரிய வித்தியாசம் உள்ளது. ஏர்டெல்லின் ரூ.289 திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும், ரூ.199 திட்டத்தில் இது கிடைக்காது. ஏர்டெல் ரூ. 239 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது.