இம்பால், ”மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் தற்போது திசை மாறியுள்ளது, கவலை அளிப்பதாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்,” என, அம்மாநில முதல்வர் பைரோன் சிங் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையினராக உள்ள மெய்டி சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரான கூகி சமூகத்தினர் இடையே, இடஒதுக்கீடு தொடர்பாக மோதல் வெடித்துள்ளது.
கடந்த மே 3ம் தேதி துவங்கிய வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. இதுவரை, 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பிரச்னை தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் நடத்தினார். இந்நிலையில், அமித் ஷாவை, முதல்வர் பைரோன் சிங் நேற்று முன்தினம்சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின் அவர் கூறியதாவது:
மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அங்குள்ள நிலவரம் தொடர்பான அறிக்கையை அமித் ஷாவிடம் வழங்கியுள்ளேன்.
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் திசை மாறியுள்ளதற்கு அவர் வேதனை தெரிவித்தார்.
கிராமங்களில் துப்பாக்கிச் சூடு நடப்பது, பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பதற்றம் நிலவுவதற்கு அவர் கவலை தெரிவித்தார்.
ராணுவம், போலீஸ் உட்பட பாதுகாப்புப் படையினரை பணி செய்ய விடாமல் தடுப்பது, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வழிமறிக்கப்படுவது, போராட்டம் திசை திருப்பப்படுவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement