புதுடில்லி: புதுடில்லியின் சிறந்த பிரியாணி சமையல் கலைஞரை தேர்ந்தெடுக்கும், ‘பிரியாணி சாம்பியன் லீக்’ போட்டியில், சமையல் கலைஞர் லக்கான் சிங் பட்டத்தை வென்றார்.
புதுடில்லியில் உள்ள உணவகங்களில் மிகச்சிறந்த பிரியாணியை சமைக்கும் சமையல் கலைஞரை தேர்ந்தெடுக்கும், ‘தாவத் பிரியாணி சாம்பியன்ஷிப் லீக்’ போட்டி, ஐ.டி.சி., ஷெரட்டன் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடந்தது.
முதல்கட்ட போட்டியில், 200 பேர் பங்கேற்றனர். இதில், இறுதிப் போட்டிக்கு தேர்வான ஐந்து பேர், நேற்று முன்தினம் மோதினர். பிரபல சமையல் கலைஞர்களான லக் ஷ்மண் சிங், முகமது ஷான், மொய்னுதீன், ரபே அசாம், லக்கான் சிங் ஆகியோர் மோதினர்.
இறுதிப் போட்டிக்கு 90 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் செய்த பிரியாணியை சமையல் கலைஞர் மன்ஜித் கில், வன்ஷிகா பாட்டியா மற்றும் உணவு விமர்சகர் வீர் சங்வி ஆகியோர் ருசித்துப் பார்த்து வெற்றியாளரை தேர்ந்தெடுத்தனர்.
இதில், மேற்கு டில்லியில் உள்ள மார்க்கெட் பிளேஸ் உணவகத்தை சேர்ந்த சமையல் கலைஞர் லக்கான் சிங் வெற்றியாளராக தேர்வானார்.
அவருக்கு, 51,000 ரூபாய் ரொக்கம், சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் சிறந்த சமையல் கலைஞருக்கான மேலாடை ஆகியவை பரிசாக அளிக்கப் பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement