சென்னை: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் இன்று வெளியாகும் என தனுஷ் ட்வீட் செய்திருந்தார்.
ஆனால், எதிர்பாராத காரணங்களால் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது.
கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்: வாத்தி வெற்றியைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். ராக்கி, சாணி காயிதம் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லரை இயக்கி வருகிறார். முதன்முறையாக தனுஷ் – அருண் மாதேஸ்வரன் இணையும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
ரெட்ரோ ஸ்டைலில் பீரியட் ஆக்ஷன் ஜானர் படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்திருந்தது. நீளமான முடி, அடர்த்தியான தாடி என Rugged லுக்கில் மிரட்டலாக மாஸ் காட்டியிருந்தார் தனுஷ். பொது இடங்களிலும் தனுஷ் இதே லுக்கில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், சுந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை வெளியாகாத நிலையில், நேற்றைய தினம் தனுஷ் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் என மட்டும் கேப்ஷன் கொடுத்திருந்தார்.

அதனால், இன்று கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது திடீரென இந்த அப்டேட்டில் மாற்றம் நடந்துள்ளதாகவும், இன்று ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாது எனவும் சொல்லப்படுகிறது. அதற்கு பதிலாக நாளை ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிலிருந்து இரண்டு நாட்களில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிகிறது.
அதாவது பக்ரீத் பண்டிகையில் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை தனுஷை அவரது ரசிகர்கள் இப்படி பார்த்திருக்க வாய்ப்பே இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதனிடையே பக்ரீத் தினத்தன்று துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா டீசரும் வெளியாகிறது. அதேபோல் மாரி செல்வராஜ் – உதயநிதி கூட்டணியில் உருவாகியுள்ள மாமன்னன் படமும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தென்காசி, மதுரை பகுதிகளில் நடைபெற்று வந்த கேப்டன் மில்லர் படப்பிடிப்பு விரைவில் நிறைவு பெறும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.