ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜூன் 28 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, மேகாலயா மற்றும் அஸ்ஸாமின் பல மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ மற்றும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
