ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உதயநிதி
நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மாமன்னன். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை எடுத்த மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கின்றார்.
இவரின் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்தாண்டு துவங்கப்பட்ட இப்படம் இன்னும் சில நாட்களில் திரையில் வெளியாகவுள்ளது.
Rajini: லால் சலாம் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் 54 வயதான நடிகை..நீண்டநாள் ஆசை நிறைவேறிவிட்டதாம்..!
இந்நிலையில் உதயநிதி இப்படத்துடன் சினிமாவில் இருந்து விலக இருப்பதால் இப்படத்தை எப்படியாவது மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என செயல்பட்டு வருகின்றார். அதன் காரணமாகவே மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப்பிரமாண்டமாக நடத்தினார் உதயநிதி. மேலும் இவ்விழாவிற்கு கமல்ஹாசனை சிறப்பு விருந்தினராக அழைத்தார்.
மாமன்னனாக வடிவேலு
இந்நிலையில் கமலின் முன்பே மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்தை பற்றி பேசியது பெரும் சர்ச்சையானது. இதன் காரணமாக மாரி செல்வராஜை பலர் விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் மாமன்னன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது.
படத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பலமடங்கு எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 29 ஆம் தேதி மாமன்னன் திரையில் வெளியாகவுள்ள நிலையில் இபபடத்தின் கதையை பற்றிய ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வெளியான முழு கதை
அதாவது ஊரிலேயே மதிக்கத்தக்க மனிதராக இருந்து வருகின்றார் வடிவேலு. இவரின் மகனான உதயநிதி தற்காப்பு கலை கற்றுத்தருபவராக இருக்கின்றார். தன் தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் அவரைவிட்டு பிரிந்து செல்கின்றார் உதயநிதி. இதையடுத்து வடிவேலுவுக்கு சில பிரச்சனைகள் கிளம்ப அந்த பிரச்னையை எதிர்த்து தன் தந்தையுடன் இணைந்து போராடுகிறார் உதயநிதி. இதுதான் படத்தின் ஒருவரி கதையாம்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படங்களை போல மாமன்னன் படமும் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை உதயநிதிக்கு பெற்றும் தரும் எனவும் கோலிவுட் வட்டாரங்களால் நம்பப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.