ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய்யின் லியோ படத்தில் இருந்து வெளியான நா ரெடி பாடலை ஒருபக்கம் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் மறுபக்கம் பல சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்திலிருந்து நா ரெடி பாடல் வெளியானது. அனிருத்தின் இசையில் விஜய்யே இப்பாடலை பாடியிருந்தார்.
தர லோக்கலான குத்து பாடலாக வெளியான நா ரெடி பாடலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். என்னதான் வழக்கம் போல இப்பாடலும் சில பாடல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக சில விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்களால் இப்பாடல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
நா ரெடி சர்ச்சை
இந்நிலையில் எந்தளவிற்கு இப்பாடல் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றதோ அதே அளவிற்கு இப்பாடலுக்கு எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.விஜய் இப்பாடலில் புகைபிடிப்பது போல நடித்துள்ளது தான் இந்த சர்ச்சைக்கு காரணமாக இருக்கின்றது.
மாமன்னன் படத்தின் முழு கதை இதோ..! தந்தைக்கு ஏற்பட்ட பிரச்சனை..களத்தில் இறங்கிய மகன்..
விஜய்யை பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது அவர் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது சரியல்ல. அவர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இப்பாடலை நீக்கக்கோரி புகார்களும் கொடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே இதன் காரணமாக லியோ படத்திற்கு சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் விஜய் சத்தமில்லாமல் லியோ படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளார். லியோ படத்தில் தன் போர்ஷனை விஜய் வரும் ஜூன் 28 ஆம் தேதியுடன் முடிக்கவுள்ளாராம்.
லியோ படப்பிடிப்பு நிறைவு
தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து காஷ்மீரில் எடுக்க தவறிய சில காட்சிகளை லோகேஷ் ஆந்திராவில் படமாக்கி வருகின்றார். எனவே இத்துடன் விஜய்யின் போர்ஷன் முடிவடைய இருக்கின்றதாம்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
மேலும் லியோ படத்தில் இடம்பெறும் நா ரெடி பாடலில் எந்த காட்சியையும் படக்குழு நீக்கப்போவதில்லை எனவும் தகவல்கள் வருகின்றது. இந்நிலையில் விஜய் இதுவரை இதுபோல பல சர்ச்சைகளையும் சிக்கல்களையும் சந்தித்துள்ளார். எனவே இதுபோல சர்ச்சைகள் அவருக்கு புதிதல்ல என்பதால் அதைப்பற்றி யோசிக்காமல் தன் வேலையை பார்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.