Pregabalin Capsules 150 mg வகையின் மருந்து அட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரால் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய வேனில் கொண்டு செல்லப்பட்ட நாற்பத்தி இரண்டாயிரத்து முன்னூறு (42300) Pregabalin Capsules 150 mg மருந்து அட்டைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கல்பிட்டி, கரம்ப வீதித் தடைக்கு அருகில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 ஆம் திகதியன்று இரவு, கல்பிட்டி கரம்ப வீதித் தடைக்கு அருகில், வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று அவதானித்துச் சோதனையிடப்பட்ட போது குறித்த வேனில் கொண்டு செல்லப்பட்ட நாற்பத்தி இரண்டாயிரத்து முன்னூறு (42300) Pregabalin Capsules 150 mg மருந்து அட்டைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் குறித்த சந்தேகநபர் (01), வேன் (01) மற்றும் 42300 Pregabalin Capsules 150 mg மருந்து அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரோச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.