Prithviraj – பிருத்விராஜுக்கு விபத்து.. என்ன நடந்தது?.. முழு விபரம் உள்ளே

சென்னை: Prithviraj (பிருத்விராஜ்) நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜுக்கு படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது. அவர் விரைவில் நலமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தித்துவருகின்றனர்.

மலையாளத்தில் 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் பிருத்விராஜ். முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியதன் மூலம் மல்லுவுட்டில் அவருக்கு வாய்ப்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. வில்லன், கதாநாயகன் என மாறி மாறி பல ரோல்களை செய்தார். தமிழில் அவர் கே.வி.ஆனந்த் இயக்குநராக அறிமுகமான கனா கண்டேன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

மிரட்டும் வில்லன்: ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்க கோபிகா அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். வில்லன் என்றாலே தொண்டை கிழிய கத்தி வசனம் பேச வேண்டும் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு பக்குவமான குரலால் பேசி பார்வையால் மிரட்டி வில்லன் ரோலை செய்திருந்தார் பிருத்வி. இதனையடுத்து அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.

தமிழிலும் வாய்ப்புகள்:கனா கண்டேன் படத்தில் விலல்னாக நடித்தாலும் அவர் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்று உணர்ந்துகொண்ட மற்ற இயக்குநர்கள் அவரை தமிழில் கதாநாயகனாகவே புக் செய்தனர். அந்த வகையில் பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் ஹீரோவாக நடித்தார்.பிறகு ராதாமோகன் இயக்கத்தில் வெளியான மொழி படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.தொடர்ந்து சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவிய தலைவன், அபியும் நானும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ராவணன்: அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக கருதப்படுவது மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் திரைப்படம். விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தாலும் ஐஸ்வர்யா ராயின் கணவராகவும், ஒரு காவல் துறை அதிகாரியாகவும் நடித்து மிரட்டியிருந்தார். அதேபோல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான காவிய தலைவன் படத்திலும் அட்டகாசமாக நடித்திருந்தார். குறிப்பாக சித்தார்த் மீது பொறாமை கொள்ளும் காட்சிகளில் எல்லாம் அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்.

இயக்குநர்: நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலிப்பவர் பிருத்விராஜ். 2019ஆம் ஆண்டு மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய லூசிஃபர் படம், 2022ஆம் ஆண்டு மோகன்லாலை மீண்டும் இயக்கிய ப்ரோ டாடி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் படங்களாக அமைந்தன. அதிலும் ப்ரோ டாடி படம் மிகச்சிறந்த காமெடி படமாகவும் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது சலார்,விளையாத் புத்தா, ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

விபத்து: இந்நிலையில் விளையாத் புத்தா ப்டத்தின் படப்பிடிப்பில் பிருத்விராஜுக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது.மரையூர் என்ற இடத்தில் நேற்று படத்தின் ஷூட்டிங் நடந்தபோது சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிக்காக ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்தார் பிருத்வி. உயரமான இடத்தில் பிருத்வி தொங்கியபடி சண்டை போடும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டது.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பட யூனிட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விபத்தில் சிறிய காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.