Shalu Shammu: சொகுசு கார் வாங்கியுள்ள ஷாலு ஷம்மு.. விலையை மட்டும் கேட்டா அசந்துடுவீங்க.!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரி ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. மேலும் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர். இந்நிலையில் ஷாலு ஷம்மு புதிதாக கார் வாங்கியுள்ள விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஷாலு ஷம்மு.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தன்னுடைய கிளாமர் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் ஷாலு ஷம்மு சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஒர்க் அவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இவரின் பதிவுகள் வழக்கமாக சோஷியல் மீடியாவில் வைரலாவது வழக்கம்.

மேலும், நாகர்கோவிலை சார்ந்த ஷாலு ஷம்மு சினிமா மட்டுமில்லாமல் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். ஸ்கின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மருத்துவமனையாக இது திகழ்கிறது.

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜை கண்டிப்பா விட மாட்டோம்.. பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.!

இந்நிலையில் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜாக்குவார் F pace 20d AWD காரை வாங்கியிருப்பதாக புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் என்பதால் ரூ. 50 லட்சம் ரூபாய்க்கு இந்த காரை ஷாலு ஷம்மு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஜாக்குவார் காரை வாங்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும் ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார். பெரிய பட்ஜெட்டில் நடிகை கார் வாங்கியுள்ளதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Vetrimaaran: தரமா ஒரு சம்பவம்.. ‘வாடிவாசல்’ பற்றி சூப்பரான மேட்டர் சொன்ன வெற்றிமாறன்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.