ஓ.ஜி படத்தின் 50% சதவீத படப்பிடிப்பு நிறைவு

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஓ.ஜி . பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர் . தமன் இசையமைக்கிறார். கேங்ஸ்டர் கதை களத்தை மையப்படுத்தி ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இப்போது மூன்று கட்ட படப்பிடிப்பு அதவாது படத்தின் 50% சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.