
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலையில் ரஜினி?
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஜஸ்வர்யா தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் வைத்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்து வருகிறார் . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக லால் சலாம் படக்குழுவினர்களுடன் ரஜினி திருவண்ணாமலை சென்றுள்ளார். அங்கு உள்ள ஊசாம்பட்டியில் நேற்று பிற்பகல் முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் ரஜினியை காண படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். தனியார் இடம் என்பதால் கூட்டம் கூட வேண்டாம் என்று அவர்களை திருப்பி அனுப்பினர். அடுத்த 3நாட்கள் திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதால் ரஜினி அடுத்து மூன்று நாட்கள் திருவண்ணாமலையில் தங்கி நடிக்கவுள்ளார். இதற்கிடையில்திருவண்ணாமலை அண்ணாமலையாரை ரஜினி தரிசிப்பார் என்கிறார்கள்.