வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: மத்தியபிரதேசத்திற்கு செல்லும் பிரதமர் மோடி இன்று ஒரே நாளில் 5 வந்தே பாராத் ரயிலை துவக்கி வைக்கிறார். அதிவேக ரயில் பயணத்தால் மக்களின் நேரம் வெகுவாக குறைவதுடன் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று ரயில்வே வட்டாரம் தெரிவிக்கிறது. இன்றுடன் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்கிறது.
இன்றைய மத்திய பிரதேச பயணம் குறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில்; மத்திய பிரதேசம் ( ஜூன்27)ல் செல்கிறேன். 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளேன். ராணிகமலபதி ரயில் நிலையத்தில் இருந்தபடி 5 வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கிறேன். இந்த புதிய ரயில்கள் மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்டிரா, பீகார், கோவா, ஜார்கண்ட் மக்களையும் இப்பகுதியை சென்றடைவதிலும் இணைக்கும் பாலமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்று புதிதாக துவங்கும் வந்தேபாரத் ரயில்கள்.
Rani Kamalapati (Bhopal)-Jabalpur Vande Bharat Express
Khajuraho-Bhopal-Indore Vande Bharat Express
Madgaon (Goa)-Mumbai Vande Bharat Express
Dharwad-Bengaluru Vande Bharat Express
Hatia-Patna Vande Bharat Express.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement