சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது பிக் பாஸ்.
இதுவரை 6 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் 7வது சீசனும் தொடங்கவுள்ளது.
இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துகொள்ளவிருக்கும் விஜய் டிவி நட்சத்திரங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 7ல் விஜய் டிவி நட்சத்திரங்கள்:விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை கடந்துள்ளது. கடந்தாண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 6ல் சீரியல் நடிகர் அசீம் டைட்டில் வென்றார். விக்ரமன், ஷிவின், அசீம் என மூன்று பேரும் டைட்டில் வின்னர் ரேஸில் முன்னிலையில் இருந்தனர்.
இதில் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அசீம் வெற்றிப் பெற்றதாக கமல்ஹாசன் அறிவித்தார். இது பிக் பாஸ் ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும் விக்ரமன், ஷிவின், ஏடிகே, அமுதவாணன், ரச்சிதா, தனலட்சுமி ஆகியோர் ரசிகர்களிடம் பிரபலமாகினர். இதனைத் தொடர்ந்து இப்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனுக்கு 130 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமாக விஜய் டிவி நட்சத்திரங்கள் சிலரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். அதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாம்.

அதன்படி, சூப்பர் சிங்கர் புகழ் மாகாபா ஆனந்த், KPY சரத், உமா ரியாஸ், பாவானா ஆகியோர் பங்கேற்பதாக சொல்லப்படுகிறது. இவர்களில் மாகாபா ஆனந்த், சரத் இருவரும் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் டிமிக்கி கொடுத்து வந்தனர். ஆனால், இப்போது அவர்களை சமாதனம் செய்து சம்மதிக்க வைத்துவிட்டார்களாம். இவர்களுடன் மேலும் சில விஜய் டிவி பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
இவர்கள் தவிர சீரியல் நட்சத்திரங்கள், ஃபீல்ட் அவுட் ஆன சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பிக் பாஸ் சீசன் 7ல் களமிறங்கவுள்ளார்கள். இதனால், இந்த சீசனும் ரசிகர்களுக்கு செம்ம என்டர்டெயின்மெண்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான ப்ரோமோவும் விரைவில் வெளியாகவுள்ளது.