புதுடில்லி: சவூதியில் இருந்த வந்த நபரை, சுங்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி அழைத்துச்சென்று, ரூ.4 லட்சம் வழிப்பறி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் இருந்து வந்த விமானத்தில் ராஜஸ்தானின் அஜ்மீரை சேர்ந்த முகமது சுலைமான்(53) என்பவர் டில்லி விமான நிலையம் வந்திறங்கினார்.
விமான நிலையம் வெளியே வந்த அவரை, மர்ம நபர் ஒருவர், சுங்கத்துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு விசாரணை நடத்தி உள்ளார். பிறகு, அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்ட அந்த நபர், மற்றொரு நபருடன் இணைந்து முகமது சுலைமானை வேனில் ஏற்றிக்கொண்டு சென்றார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததும், சுலைமானிடம் இருந்த ரூ.4 லட்சம், வெளிநாட்டு மொபைல்போன்கள் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement