Nayanthara:நயன்தாராவுக்கு கோடி, கோடியா கொட்டப் போகுது: சூப்பர் ஐடியா கொடுத்த விக்னேஷ் சிவன்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Nayanthara side business: நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்திருக்கும் ஐடியா மூலம் அவருக்கு நிரந்தரமாக வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

​தொழில் அதிபர் நயன்தாரா​சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் ஐயா படம் மூலம் கோலிவுட் வந்த நயன்தாரா இன்று நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்த பணத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நிறைய இடம் வாங்கிப் போட்டிருக்கிறார். மேலும் லிப் பாம் உள்ளிட்ட சில பொருட்களிலும் முதலீடு செய்திருக்கிறார். சினிமா தவிர்த்து வருமானம் வரும் வகையில் முதலீடுகள் செய்கிறார். இந்நிலையில் தான் நிரந்தர வருமானத்திற்கு ஐடியா கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

​Arjun: அர்ஜுன் மகளுக்கும், தம்பி ராமையா மகனுக்கும் எப்படி பழக்கம், திருமணம் எப்பொழுது?:விபரம் இதோஜி.பி. முத்து​படத்துல எனக்கு நல்ல கேரக்டர் குடுத்தாங்க​​விக்னேஷ் சிவன் ஐடியா​கேரளாவில் இருக்கும் நிலம் ஒன்றில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி அதை வாடகைக்கு விடுமாறு நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் ஐடியா கொடுத்திருக்கிறாராம். வீட்டு வாடகை என்பது நிரந்தரமான வருமானம் ஆகும். சினிமாவில் இருந்து வருமானம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, வீட்டு வாடகை கை கொடுக்கும் என்பதே விக்னேஷ் சிவனின் கணக்கு ஆகும்.
​நயன்தாராவின் குழந்தைகள்​இரட்டை குழந்தைகள் வந்த பிறகு அவர்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறார் நயன்தாரா. பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதுடன், ஹீரோயினை மையமாக கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே பொன்னியின் செல்வன் படம் ரிலீஸான பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் எகிறிவிட்டது. அவர் நயன்தாராவுக்கு நிகரமாக படம் ஒன்றுக்கு ரூ. 10 கோடி வாங்கத் துவங்கிவிட்டார்.
​பாலிவுட்டில் நயன்​Kamal Haasan: ப்ராஜெக்ட் கே பட்ஜெட் ரூ. 600 கோடி: பிரபாஸுக்கு ரூ. 150 சி, கமலுக்கு ரூ. 130 சி இல்ல ரூ. 20 கோடிப்புகோலிவுட், டோலிவுட், மல்லுவுட் படங்களில் நடித்து வரும் நயன்தாரா ஜவான் படம் மூலம் பாலிவுட் சென்றிருக்கிறார். அட்லி இயக்கியிருக்கும் அந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அட்லியும், நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜவான் படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

​விக்னேஷ் சிவன் படம்​நயன்தாராவின் கெரியர் இப்படி சென்று கொண்டிருக்க, விக்னேஷ் சிவனோ தன் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். அந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோ. தன் காதல் மனைவியான நயன்தாராவை மீண்டும் தன் படத்தில் நடிக்க வைக்கிறார் விக்னேஷ் சிவன். முன்னதாக அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தை அவர் இயக்குவதாக இருந்தது. படப்பிடிப்பு துவங்க வேண்டிய ஜனவரி மாதம் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

​Kamal Haasan: அமைச்சரானதும் முதல் வேலையா கமலுக்கு நோ சொன்ன உதயநிதி ஸ்டாலின்​
​அஜித் ரசிகர்கள்​அஜித் குமாரின் படத்தில் இருந்து நீக்கிவிட்டாலும் அது தொடர்பான இன்ஸ்டா போஸ்ட்டுகளை விக்னேஷ் சிவன் நீக்கவில்லை. மேலும் அஜித் மீதான பாசமும் அவருக்கு குறையவில்லை. அஜித் தன் பைக்கில் ரைடு சென்றால் அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு வருகிறார். அவரின் இந்த குணம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. கவலைப்பட வேண்டாம் அன்பான இயக்குநரே, நிச்சயம் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு உங்களை தேடி வரும் என ஆறுதல் கூறியுள்ளனர்.
​விடாமுயற்சி​விக்னேஷ் சிவனை நீக்கிய பிறகு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்து படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைத்து அறிவிப்பு வெளியிட்டார்கள். படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என்றார்கள். ஆனால் இதுவரை படப்பிடிப்பு துவங்காதது அஜித் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. விடாமுயற்சி படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறாராம் த்ரிஷா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.