சிங்கப்பூர், சிங்கப்பூரில் இந்தியரின் காதை கடித்து காயம் ஏற்படுத்திய மற்றொரு இந்தியருக்கு ஐந்து மாத சிறைத் தண்டனை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஏராளமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு, பணி நிமித்தமாக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மனோகர் சங்கர், 37, என்பவர், 47 வயதான மற்றொரு இந்தியரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, வீட்டின் மாடியில் அமர்ந்து மது அருந்திய சங்கரிடம், வீட்டு உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சங்கர் வீட்டு உரிமையாளரை திட்டியதுடன், அவரின் காதை கடித்து காயப்படுத்தினார்.
இதையடுத்து, சிகிச்சைக்காக வீட்டு உரிமையாளரான இந்தியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து சங்கரை அந்நாட்டு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, தகாத வார்த்தைகளால் திட்டியது, காதை கடித்து காயப்படுத்தியதை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து, சங்கருக்கு நீதிபதி ஐந்து மாத சிறை தண்டனை விதித்தார். அத்துடன், 60,780 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement