Maaveeran: டீகோட் செய்யப்பட்ட மாவீரன் ட்ரைலர்..படத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா ? அடேங்கப்பா..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
சிவகார்த்திகேயன் தற்போது தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். முன்பு போல் காதல் கலந்த காமெடி படங்களில் மட்டுமே நடிக்காமல் வித்யாசமான ஜானரில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் SK21 படத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகின்றார். ஒரு ராணுவ வீரரான வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கி வருகின்றது. இதைப்போல சிவகார்த்திகேயன் வித்யாசமான ஜானரில் நடித்த திரைப்படம் தான் மாவீரன். மண்டேலா என்ற தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் மாவீரன்

தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் எல்லாம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றது மாவீரன். அந்த வகையில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது ரிலீசாகி இருக்கின்றது. ஏற்கனவே மாவீரன் திரைப்படம் பாண்டஸி ஜானரில் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் அதை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

Maamannan: மாமன்னன் சக்ஸஸ் மீட்டில் வடிவேலு பங்கேற்காதது ஏன் ? மீண்டும் வெடித்த சர்ச்சை..!

இந்த ட்ரைலரை பார்க்கும்போதே இப்படம் பாண்டஸி கலந்த காமெடி படமாக இருக்கும் என ரசிகர்களால் கணிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் மாவீரன் படத்தின் ஹேல்டைட்டே இப்படத்தில் இருக்கும் எமோஷனல் காட்சிகள் தானாம். படத்தில் சிவகார்த்திகேயன் எமோஷனல் காட்சிகளை சிறப்பாக ஸ்கோர் செய்து இருக்கிறாராம்.

இதைத்தொடர்ந்து படத்தில் மற்றுமொரு ஹைலைட்டாக இருக்கும் விஷயம் படத்தின் சண்டை காட்சிகளாம். சண்டைக்கு பயப்படும் சிவகார்த்திகேயன் ஒரு சக்தியின் மூலம் வீரம் பெற்று சண்டை செய்வாராம். அந்த சண்டை ஜாக்கி சானின் சாயலில் இருக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன.

வெளியான ட்ரைலர்

இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. குறிப்பாக இப்படத்தில் பிரபல இயக்குனர் மிஸ்கின் வில்லனாக நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் யோகி பாபு, அதிதி ஷங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கும் மிஸ்கினுக்கும் இடையே நடக்கும் காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாவீரன் படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.