மேட்டூர் அணை டூ வீராணம் ஏரி… நீர்வரத்து எப்படி… சென்னைக்கு குடிநீர் பிரச்சினை வருமா?

தமிழகத்தில் மேல் வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் ஜூலை 6ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சென்னைக்கு குடிநீர் பிரச்சினை ஏதும் இல்லை. அடுத்த சில மாதங்கள் எப்படி இருக்கும் என்பது பருவமழையின் தீவிரத்தை பொறுத்தே அமையும்.

தமிழகம் முழுவதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த கலைஞர்

தென்மேற்கு பருவமழை

குறிப்பாக கர்நாடகாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இது டெல்டா மாவட்டங்களில் பரந்து விரிந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்.

மேட்டூர் அணை நீர்வரத்து

அந்த வகையில், கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர்

தண்ணீரை திறந்து வைத்தார். இது கடலூரில் உள்ள வீராணம் ஏரியை வந்தடைய 10 நாட்கள் ஆனது. இந்த ஏரி தான் சென்னையில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

காப்பாற்றிய வீராணம் ஏரி

கடந்த சில ஆண்டுகளாக வீராணம் ஏரி பெரிதாக ஏமாற்றம் அளிக்கவில்லை. அதாவது, முழு வறட்சி நிலையை அடையவில்லை. ஓரளவு தண்ணீர் இருப்பு காரணமாக சென்னையை காப்பாற்றி வந்தது. கோடை காலங்களில் கூட 100 கன அடி நீர் வரை தண்ணீர் இருந்தது. வீராணம் ஏரியின் வழித்தடத்தை ஆராய்ந்தால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றப்படும்.

காவிரியில் நீர்வரத்து

இது திருச்சி மாவட்டம் கொள்ளிடத்தை வந்தடையும். அங்கிருந்து பல்வேறு கிளைகளாக பிரிந்து கல்லணை மற்றும் கீழணைக்கு செல்கிறது. கல்லணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேர்கிறது. தற்போது காவிரி ஆற்றில் சீரான நீர்வரத்து காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அடுத்த 10 நாட்கள் தான்

வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 800 கன அடியாக அதிகரித்துள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு என்று பார்த்தால் 1,456 மில்லியன் கன அடி. அதில் 211 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது. தற்போதைய வேகத்தில் தொடர்ந்து தண்ணீர் வந்தால் அடுத்த 10 நாட்களில் வீராணம் ஏரி நிரம்பி விடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னைக்கு மெட்ரோ குடிநீர்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஓரளவு கைகொடுத்து வருவதை பார்க்க முடிகிறது. இதனால் சென்னைக்கு நடப்பாண்டு குடிநீர் பிரச்சினை வராது என்றே தெரிகிறது. தற்போது வீராணம் ஏரியில் இருந்து நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் தண்ணீர் மெட்ரோ குடிநீராக சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.