`முதல்வர் ஸ்டாலினுக்கு கோ பேக் சொல்லுவோம்!’ – அண்ணாமலை
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாம் கட்ட கூட்டம் பெங்களுரு நகரில் நடைபெற இருக்கிறது. இதனிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகேதாட்டூவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மேகேதாட்டூ விவகாரத்தில் பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை. மேகேதாட்டூ விவகாரம் தற்போது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், தமிழக முதல்வர் அங்கு சென்றால் பாஜக போராட்டம் நடத்தும். கர்நாடகாவுக்கு சென்றால் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கோ பேக் சொல்வோம்” என்றார்.