சென்னை: Trisha (த்ரிஷா) த்ரிஷாவின் தாய் குறித்து பலரும் அறிந்திருக்கும் சூழலில் அவரது தந்தை குறித்த தகவல்களை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார்.
மிஸ் சென்னை பட்டம் வென்றதன் மூலமாக பிரபலமானவர் த்ரிஷா. அதனையடுத்து ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் லேசா லேசா படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் வெளியாவதற்குள் மௌனம் பேசியதே படத்தில் கமிட்டாகிவிட்டார் த்ரிஷா. எனவே அவர் கமிட்டான முதல் படம் லேசா லேசா ஆனால் முதலில் ரிலீஸான படம் மௌனம் பேசியதே.
முன்னணி ஹீரோயின்: அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் த்ரிஷா. குறிப்பாக சூர்யாவிடம், தனியாவா பேசலாமே என அவர் சொல்வது ரசிகர்களின் மொபைலில் பல வருடங்களுக்கு இருந்தது. மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு தொடர்ந்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
கனவுக்கன்னி த்ரிஷா: அதனையடுத்து விஜய், அஜித், சூர்யா என பலருடன் ஜோடி போட்டார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு விஜய்யுடன் கில்லி படத்தில் நடித்தார். தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்திலிருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த கனவுக்கன்னியாக மாறினார் த்ரிஷா. கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாகவும் விஜய் – த்ரிஷா ஜோடி மாறியது.
பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன்: 2002ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை தொடர்ந்து லைம் லைட்டில் இருக்கும் த்ரிஷா டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான சூழலில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியானது. அந்தப் படத்தில் குந்தவையாக கலக்கியிருந்த த்ரிஷா அடுத்ததாக லியோ படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என புகழப்பட்ட விஜய் – த்ரிஷா ஏறத்தாழ 14 வருடங்களுக்கு பிறகு திரையில் மீண்டும் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷாவின் குடும்பம்: நடிகை த்ரிஷாவுக்கு நிழலாக இருப்பவர் அவரது தாய் உமா கிருஷ்ணன். பல வருடங்களாக தனது மகளுக்கு பக்க பலமாக நிற்கும் அவரைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அவரது தந்தை கிருஷ்ணன் குறித்து பலருக்கும் வெளியே தெரியாது. இப்படிப்பட்ட சூழலில் அவர் குறித்து சில விஷயங்கள் தெரியவந்திருக்கிறது.

என்ன செய்கிறார்: அதாவது தனது மகள் மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் தன்னுடைய உழைப்பில் தான் இருக்க வேண்டும் என கிருஷ்ணன் நினைக்கிறாராம். சில வருடங்களுக்கு முன்னர்வரைக்கூட சென்னை தி.நகரில் இருக்கும் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணியாற்றினாராம். இவர்தான் த்ரிஷாவின் தந்தை என பலரும் அவர் காதுபட சொன்னாலும் அதை கண்டுகொள்ளமாட்டாராம் கிருஷ்ணன்.
எனட்ட கேட்காதீங்க: பத்திரிகையாளர்கள் அந்த ஹோட்டலுக்கு சென்றால் ரொமப்வே கேஷுவலாக பேசுவாராம் கிருஷ்ணன். அப்போது த்ரிஷா குறித்து அவரிடம் கேட்டால், என்னிடம் அவளைப் பற்றி கேட்காதீங்க சார்; த்ரிஷா பற்றி எதுவாக இருந்தாலும் அவளோட அம்மாட்ட கேட்டுக்கோங்க என கூறி நழுவிவிடுவாராம். ஒருவேளை த்ரிஷா நடிகையாக மாறியது அவரது தந்தைக்கு பிடிக்காமல் இருக்கலாம் என கூறி பத்திரிகையாளர் செய்யாறு பாலு இந்தத் தகவல்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.