சென்னை: இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்ட படங்களின் நாயகனாகவே பார்க்கப்படுகிறார். இவரது இயக்கத்தில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.
அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட்டாகி இயக்கிவருகிறார். இவரது மகள் அதிதி ஷங்கர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அதிதி சமையலில் ஷங்கருக்கு பிடித்த உணவு: இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டங்களின் நாயகனாகவே பார்க்கப்படுகிறார். இவரது ஒவ்வொரு படமும் வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாகி ரசிகர்களை கவர்ந்தவை. ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை தமிழில் இயக்கியுள்ள இயக்குநர் ஷங்கர், தெலுங்கிலும் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தை தற்போது இயக்கி வருகிறார். தமிழில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தையும் இயக்கிவருகிறார்.
கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தியன் 2 படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ட்ராப் ஆனது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழில் மிகச்சிறந்த இயக்குநரான ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் பாகமும் மிரட்டலாக அமைந்தது. கமல்ஹாசன் கேரியரில் இந்தப் படம் பெஸ்ட்டாக அமைந்தது.
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் தற்போது நாயகியாகியுள்ளார். கடந்த ஆண்டில் கார்த்தியுடன் அதிதி இணைந்து நடித்த விருமன் படம் ரிலீசானது. முதல் படத்தில் தன்னை ஸ்டைலாக காட்டிக் கொள்ளவே அனைத்து நடிகைகளும் விரும்புவார்கள். அனால் தன்னுடைய முதல் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்திருந்தார் அதிதி. மேலும் இந்தப் படத்தில் இவர் பாடிய பாடலும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்தப் பாடலை யுவனுடன் இணைந்து பாடியுள்ளார் அதிதி.
தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார் அதிதி. இந்தப் படம் வரும் 14ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திலும் அதிதி ஒரு பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியுள்ளார். வண்ணாரப்பேட்டையிலே என்ற இந்தப் பாடல் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. இந்தப் படத்தில் அதிதியின் ரோல் என்னவாக இருக்கும் என்று அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் பிரபல சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தான் நன்றாக சமைப்பேன் என்று அதிதி தெரிவித்துள்ளார். அவர் போடும் ஆஃப் பாயில் தன்னுடைய தந்தை ஷங்கருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் வீட்டில் யார் இருந்தாலும், தன்னை மாடியிலிருந்து அழைத்து ஆஃப் பாயில் போடச் சொல்லி சாப்பிடுவார் என்றும் அதிதி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு நன்றாக பிரியாணி செய்யத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்டப் முட்டை புர்ஜியும் தன்னுடைய கைவண்ணத்தில் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.