Maamannan:வடிவேலுவுக்கு மாமன்னன் ஏன் இந்த அளவுக்கு ஒர்க்அவுட் ஆச்சுனு தெரியணுமா?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
மாரி செல்வராஜ் இயக்கத்தில்
உதயநிதி ஸ்டாலின்
, வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பக்ரீத் பண்டிகை அன்று வெளியான மாமன்னனுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
படம் பார்க்க தியேட்டருக்கு செல்லும் அனைவரையும் ஈர்க்கிறார் வடிவேலு. அவரை சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அதை ரசிகர்களை ஏற்கவும் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவராக நடித்துள்ளார் வடிவேலு. படத்தில் அவர் கஷ்டப்படுவது, அழுவதை பார்த்து நமக்கும் அழுகை வருகிறது. வடிவேலு தானே அடி வாங்குகிறார், அழுகிறார், அவமானப்படுகிறார் என்று தியேட்டரில் யாருமே சிரிக்கவில்லை.

அதென்ன வடிவேலு தானே என கேட்கிறீர்களா?. மாமன்னனுக்கு முன்பு வடிவேலு என்றால் அவரின் நகைச்சுவைகள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். முந்தைய படங்களில் வடிவேலுவை யாராவது ஓங்கி அடித்தாலோ, அவமானப்படுத்தினாலோ, கலாய்த்தாலோ ரசிகர்கள் அவருக்காக ஃபீல் பண்ண மாட்டார்கள், குபீரென்று சிரிப்பார்கள். அவர் அடி வாங்கி யம்மா என்று கத்தினால் கூட ரசிகர்கள் சிரிப்பார்கள்.

மாமன்னனில் வடிவேலு மனைவியாக நடித்தவர் பெரிய இடத்து மருமகள்னு தெரியுமா?

அதற்கு காரணம் அவரை இயக்குநர்கள் காட்டிய விதம். முந்தைய படங்களை போன்று தான் மாமன்னனிலும் அசிங்கப்பட்டிருக்கிறார், அழுதிருக்கிறார். ஆனால் அதை மாரி செல்வராஜ் காட்டிய விதம் தான் வடிவேலுவை பார்த்து நம்மை ஃபீல் பண்ண வைக்கிறது.

எனவே, இந்த மாமன்னன் வடிவேலுவின் மாற்றத்திற்கு முழு காரணம் மாரி செல்வராஜ் என தைரியமாக கூறலாம். வடிவேலுவின் கெரியரை மாமன்னனுக்கு முன், மாமன்னனுக்கு பின் என தாராளமாக பிரிக்கலாம்.

இனி வடிவேலுவை நம்பி சீரியஸான கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் முன் வருவார்கள். வடிவேலுவை சீரியஸாக காட்டினால் மக்கள் ஏற்பார்களா என யாருக்கும் துளி கூட சந்தேகம் வராது.

மாமன்னன் படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் தான் என்றாலும் படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் வடிவேலு. ஹீரோ உதயநிதி தான் ஆனால் மாமன்னன் வடிவேலுவின் படம் என விமர்சனம் எழுந்துள்ளது.

மாமன்னன் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. அதனால் தான் தொடர்ந்து தினமும் கோடிகளில் வசூல் நடத்தி வருகிறார் மாமன்னன்.

Maamannan:மாமன்னன் வடிவேலுவுக்கு தேசிய விருது கொடுக்கணும்: நயன்தாரா பட நடிகை

இதற்கிடையே மாமன்னனுக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்க வேண்டும் என பிரபல நடிகை மாலா பார்வதி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

வடிவேலு சிங்கம் மாதிரி இருக்கிறார் என மாமன்னன் படம் பார்த்த இயக்குநர் வசந்தபாலன் பாராட்டியிருக்கிறார். காமெடிக்காக வடிவேலுவை பற்றி பேசியது போக தற்போது சீரியஸாக நடித்திருப்பதற்காக பேசப்படுகிறது.

நேசமணி தலையில் சுத்தியல் விழுந்து சீரியஸாக இருக்கிறார் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என ட்விட்டரில் டிரெண்டானதை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அதற்கு பிறகு தற்போது தான் சமூக வலைதளங்களை தன் வசமாக்கிவிட்டார் வடிவேலு.

நடிப்பால் மட்டும் அல்ல அந்த ராசாக் கண்ணு பாட்டுக்காகவும் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலுவின் குரலில் அந்த பாடல் சூப்பர் ஹிட்டாகிவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.