KH233: கமலின் கே.ஹெச். 233 ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே ரூ. 125 கோடி வசூல்: ஆண்டவர் வேற லெவல்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ஹெச். வினோத் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் படத்தை தற்போதைக்கு கே.ஹெச். 233 என்று அழைக்கிறார்கள்.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
அந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். வினோத் படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன், தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் கமல்.

கே.ஹெச். 233 படத்தின் கதை கமல் ஹாசனுடையது. அவர் கதையை தான் வினோத் படமாக்குகிறார். இந்நிலையில் கே.ஹெச். 233 படம் ரூ. 125 கோடி வசூல் செய்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

கே.ஹெச். 233 படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ரூ. 125 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம். கமல் ஹாசனின் கெரியரில் ஒரு படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ. 125 கோடியை தொட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கே.ஹெச். 233 படத்திற்கு வினோத் தான் கதை என்று நினைத்த நிலையில் கமல் ஹாசன் அந்த வேலையை செய்வது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. கமல் படத்தை இயக்குவது குறித்து வினோத் கூறியிருப்பதாவது,

இது எனக்கு ஸ்பெஷலான படம். உலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து வேலை செய்வது, அவர் கதையை இயக்குவது த்ரில்லாக இருக்கிறது என்றார்.

மறுபக்கம் வினோத்தை பாராட்டியிருக்கிறார் கமல் ஹாசன். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவில் கமல் ஹாசனின் கையில் தீப்பந்தம் இருக்கிறது. மேலும் Rise to Rule என்கிற கேப்ஷன் வைத்திருக்கிறார்கள்.

இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது படத்தில் அரசியல் பேசுவார் கமல் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஹெச். 233 படத்தில் கமல் விவசாயியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் விவசாயம் மற்றும் அரசியல் கலந்து வரும் படம் தான் கே.ஹெச். 233 ஆ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதையடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார்.

பிரபாஸ் படத்திற்காக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் கமல். 30 நாட்கள் நடிக்க கமல் ஹாசனுக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே பட வேலை முடிந்ததும் கே.ஹெச். 233 படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக ரூ. 200 கோடி ஹிட் படம் கொடுத்தவர் கமல் ஹாசன் என்று சினிமா ரசிகர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள்.

முதல் முறையாக ரூ. 200 கோடி ஹிட் கொடுத்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?: ரஜினியோ, விஜய்யோ இல்ல நம்ம…

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான தசாவதாரம் படம் ரூ. 200 கோடி வசூல் செய்தது. ரூ. 200 கோடி ஹிட் கொடுத்த முதல் தமிழ் நடிகர் என்கிற பெருமையை பெற்றார் கமல் ஹாசன்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான விக்ரம் படமோ ரூ. 500 கோடி வசூல் செய்தது. கமல் ஹாசனின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது விக்ரம்.

அந்த படத்தின் சாதனையை இந்தியன் 2 கண்டிப்பாக முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படம் எந்த மொழியில் வெளியானாலும் பெரிய பிளாக்பஸ்டர் தான். படம் பற்றி பேசத் துவங்கினால் மாதக் கணக்கில் பேசுவேன் என இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கும் சித்தார்த் பேட்டி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.