வாஷிங்டன்: பூமி வரலாற்றில் ஜூலை 3ம் தேதி அதிக சராசரி வெப்பமான நாளாக பதிவாகி உள்ளதாக, அமெரிக்காவின் தேசிய ஓசியானிக் மற்றும் வளி மண்டல நிர்வாகத்தின்(National Oceanic and Atmospheric Administration(என்ஓஏஏ)) தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அன்றைய தினம், காற்று வெப்பநிலையானது 2 மீ., உயர்ந்ததுடன், பூமியை மேற்பரப்பை தொட்ட வெப்பத்தின் அளவு 66.62 டிகிரி பாரன்ஹீட்(17.01 டிகிரி செல்சியஸ்) ஆக பதிவாகி உள்ளது.
இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலையின் பேராசிரியர் ராபர்ட் ரோஹ்டே கூறுகையில், சுற்றுச்சூழல் கணிப்புக்கான தேசிய மையத்தின் தரவுகளின்படி, கடந்த 3 ம் தேதி பூமியில் பதிவான சராசரியான வெப்பநிலையானது, பூமி வரலாற்றில் அதிகமான வெப்பமான நாளாக மாறி உள்ளது. எல் நினோ மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக மாறி உள்ளது. அடுத்து 6 வாரங்களில் இன்னும் அதிகமான வெப்பமான நாட்களை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன்னர் 2022 ஜூலை மாதத்திலும், ஆண்டும், 2016 ஆகஸ்டிலும் அதிகபட்சமாக 62.46 டிகிரி பாரன்ஹீட்(16.92 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கனடாவில் 13 நகரங்கள், வட மேற்கு கனடா மற்றும் பெருவில் முன்பை விட அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதேபோல், அமெரிக்காவின் மெட்போர்ட், ஒரேகான் முதல் டம்பா, புளோரிடா வரை வெப்பநிலை அதிகமாக இருந்தது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடர்ந்து 9 வது நாளாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement