புதுடில்லி: நாட்டில் வேலையின்மை விகிதம் 8.45% ஆக உயர்ந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கார்கே வெளியிட்ட அறிக்கை:
பாஜ., அரசின் கொள்ளையினால் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. நாட்டில் வேலையின்மை விகிதம் 8.45% ஆக உயர்ந்துள்ளது.
கிராமங்களில் வேலையின்மை விகிதம் 8.73%. கிராமப்புற ஊதிய விகிதம் குறைந்துள்ளது. பா.ஜ., வின் தோல்விகளை விளம்பரங்கள் மூலம் மறைத்துவிட முடியாது. பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்து, பாஜ., வுக்கு எதிராக ஓட்டளித்து உங்கள் வெற்று முழக்கங்களுக்கு பதிலளிப்பார்கள். நிச்சயமாக பொதுமக்கள் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement