க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மற்றும் ஏனையவர்களின் தகவல்களை எந்தவொரு தரப்பினருக்கும் வழங்குவதை முற்றாக நிறுத்துமாறு அனைத்து மாகாணங்களுக்கும் அனைத்து பிரதேசங்களுக்கும் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
‘கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபையினால் தொழிற்பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை பாடசாலை அமைப்பில் மேற்கொள்ள முடியும். ஏனைய சங்கங்களுக்கு தகவல்களைப் பெற முடியாது. அடுத்த வாரம் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். எனவே, எவரும் தகவல்களை வழங்கத் தேவையில்லை,’ என்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் குறிப்பிட்டார்.