வாஷிங்டன்,-இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ரானா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008 நவ., 26ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 166 பேர் பலியாயினர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ரானா, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டு, அமெரிக்க நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது. தற்போது லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் உள்ள அவர், நாடு கடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
கலிபோர்னியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவுக்கு, அதிபர் ஜோ பைடன் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவருடைய மனுவை ரத்து செய்து, நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடும்படி அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement