மும்பை: பிக் பாஸ் ஓடிடி சீசன் 1 பிரபலமான உர்ஃபி ஜாவேத் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோ ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
வித விதமான உடைகளை உடுத்திக் கொண்டு தனது முக்கிய அங்கங்களை மட்டும் மறைத்தபடி உச்சகட்ட ஆபாசமாக போஸ் கொடுத்து வருகிறார்.
உர்ஃபி ஜாவேத்தின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவர் அணிந்து வரும் மோசமான உடைகளை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு எதிராக கமெண்ட்டுகளை போட்டு வந்தாலும் உர்ஃபி ஜாவேத்துக்கான ரசிகர்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மார்பு டிசைன் ஆடை: சமீபத்தில் தங்க நிறத்திலான மார்பு டிசைன் கவச உடையை அணிந்து கொண்டு படு ஆபாசமாக விருது விழா நிகழ்ச்சியிலே நடிகை உர்ஃபி ஜாவேத் கலந்து கொண்டு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களையே திக்குமுக்காட செய்தார்.
இந்தியாவா இல்லை வெளிநாடா என்றே பலரும் கேள்வி எழுப்பி நடிகை உர்ஃபி ஜாவேத்தை ட்ரோல் செய்தனர். துபாய்க்கு இந்த உடையில் சென்றிருந்தால் அரெஸ்ட் செய்து உள்ளே வைத்திருப்பார்கள் என்றும் கடுமையான ட்ரோல்கள் பறந்தன. ஆனால், அதற்கெல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் அடுத்தக்கட்ட ஹாட்னஸ் உடையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை உர்ஃபி ஜாவேத்.
ஸ்டார் டிசைன் உள்ளாடை: ஏற்கனவே வெறும் ஹார்ட்டின் டிசைன் ஸ்டிக்கரை தனது முன்னழகில் ஒட்டிக் கொண்டு ரசிகர்களை அதிர வைத்த உர்ஃபி ஜாவேத் தற்போது ஸ்டார் டிசைனில் உருவாக்கப்பட்ட உள்ளாடையை அணிந்து கொண்டு படு செக்ஸியாக கிளாமர் போஸ் கொடுத்து பலரையும் திணறடித்துள்ளார்.
அதிலும் திரும்பி தனது ஒட்டுமொத்த முதுகழகையும் காட்டியபடி உர்ஃபி ஜாவேத் நீல நிற சேலையில் செல்லும் வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.
கைக்கெல்லாம் கிளவுஸ் போட்டிருக்கீங்க: ப்ளூ கலர் சேலையை அணிந்து கொண்டு கவர்ச்சியின் உச்சமாக போஸ் கொடுத்துள்ள உர்ஃபி ஜாவேத்தை பார்த்த ரசிகர்கள் உங்க கைகளுக்கெல்லாம் பெரிய கிளவுஸ் போட்டு நல்லா கவர் பண்ணியிருக்கீங்க.. ஆனால், முன்னாடி தான் டிரெஸ் ரொம்பவே கம்மியா இருக்கு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தொடர்ந்து போல்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டே இளைஞர்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார் உர்ஃபி ஜாவேத் என்றும் பல முன்னணி நடிகைகளே தாங் உடையில் கவர்ச்சி ஆட்டம் போடும் போது இவர் அணியும் உடைகளில் எல்லாம் எந்தவொரு தப்பும் இல்லை என்றும் உர்ஃபி ஜாவேத் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.