திருவிழா காலங்களில் ராட்டினம் சுற்றுவது என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான விஷயமாக இருக்கும். இன்றும் கூட கோயில் திருவிழாக்களின் போது கிராமப்புறங்களில் தவறாமல் பார்க்க முடிகிறது. இதன் சுவாரஸியத்தை அதிகப்படுத்தும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளில் பிரம்மாண்ட ராட்சத ராட்டினங்கள் வந்துவிட்டன. அதில் மிக மிகப் பெரியது என்றால் துபாய் ஜுமைராவில் உள்ள அய்ன் துபாய் (Ain Dubai) எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது.
அய்ன் துபாய் ராட்சத ராட்டினம்இங்கு புளூவாட்டர் தீவு என்ற பெயரில் காணப்படும் செயற்கை தீவில் 9 ஆயிரம் டன் எடையில் பிரம்மாண்ட ராட்சத ராட்டினம் இருக்கிறது. இதை அய்ன் துபாய் என்றே மக்கள் அழைத்து வருகின்றனர். இதன் அச்சு 130 அடி நீளமும், 65 அடி அகலமும் கொண்டது. அச்சில் இருந்து வெளிப்புற சக்கரங்களை இணைக்க 192 தடித்த கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ராட்டினம் தரையில் இருந்து 689 அடி உயரம் கொண்டது. இதை தலை நிமிர்ந்து பார்த்தாலே பலருக்கும் கிறுகிறுவென சுற்றி விடும்.உச்சிக்கு சென்ற துபாய் இளவரசர்View this post on InstagramA post shared by Fazza (@faz3)சாகசப் பயணம்அப்படியே ஏறி ஒரு ரவுண்ட் வந்தால் திக் திக் நொடிகளாக கடந்து செல்லும் என்பதில் சந்தேகமில்லை. சிலருக்கு உடல் சிலிர்த்து விடும். சிலர் பயத்தில் கூச்சலிடுவர். சிலர் சாகசப் பயணமாக நினைத்து குதூகலமாவர். அய்ன் துபாய் ராட்சத ராட்டினத்தில் ஒரே நேரத்தில் 1,400 பேர் அமரலாம். ஒருமுறை ராட்டினம் சுற்றி வர 48 நிமிடங்கள் ஆகும். அதற்குள் துபாயின் அழகை 360 டிகிரியில் ரசித்து விடலாம். கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சத ராட்டினம் திறக்கப்பட்டது.
மார்ச் 2022ல் நிறுத்தம்இது பிரபல சுற்றுலா தலமாக மாறி துபாய் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வெளிநாட்டில் இருந்தும் பலர் ஆர்வத்துடன் வந்து ராட்சத ராட்டினத்தில் பயணம் செய்து சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை பெற்றனர். துபாய் இளவரசர் ஷேக் ஹமாத் ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து தேநீர் சாப்பிடுவது போல ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது கடந்த ஆண்டு பெரிதும் வைரலானது. இந்நிலையில் மார்ச் 2022ல் திடீரென ராட்சத ராட்டினத்தின் ஓட்டம் நின்று போனது.
புத்தாண்டு கொண்டாட்டம்View this post on InstagramA post shared by Ain Dubai by Dubai Holding (@aindxbofficial)காலவரையின்றி மூடல்பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஒரு மாதம், இரண்டு மாதங்கள், ஆறு மாதங்கள் என நாட்கள் ஆடின. தற்போது ஓராண்டிற்கு மேல் சென்றுவிட்டது. ஆனால் இதுவரை அய்ன் துபாய் ராட்சத ராட்டினம் திறக்கப்படவில்லை. இது துபாய் மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது. அய்ன் துபாய் ராட்சத ராட்டினம் குறித்து அதிகாரிகள் மட்டத்தில் விசாரிக்கையில், இனி ராட்டினம் இயக்க வாய்ப்பில்லை என்பது போல் கூறியுள்ளனர்.
கிளம்பும் கட்டுக்கதைகள்அதற்குள் பல்வேறு கட்டுக்கதைகளை கிளப்பி விட்டுள்ளனர். ராட்சத ராட்டினம் இயக்கப்படுவதால் பெரிய அளவில் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. அருகிலுள்ள கட்டிடங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் அடித்தளம் சேதமடைந்து விட்டது. ராட்டினத்தின் அச்சில் ஏதோ பிரச்சினை என பலரும் பேசத் தொடங்கிவிட்டனர். அதேசமயம் அப்படியே விட்டு வைக்கவும் முடியாது. ஏனெனில் ராட்டினம் முறிந்து விழுந்தால் அருகிலுள்ள கட்டிடங்கள் பலமாக பாதிக்கப்படும். சேதங்களை நினைத்து பார்க்க முடியாது.
மீண்டும் செயல்படுவது எப்போது?இந்த சூழலில் அய்ன் துபாய் ராட்சத ராட்டின செயல்பாடுகள் காலவரையற்ற வகையில் நிறுத்தப்படுவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி விசாரித்தால் ராட்டினத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். உண்மை இதுதானா? மக்கள் புலம்புவது போல ஏதேனும் ரகசிய காரணங்கள் இருக்கின்றனவா? எனக் கேள்வி எழுப்புகின்றனர். அதேசமயம் மீண்டும் அய்ன் துபாய் ராட்சத ராட்டினம் இயக்கப்படாதா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.