சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருஷ்டி டாங்கே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சிதான் குக்வித் கோமாளி. கவலை மறந்து வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.
மக்களிடம் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில், நான்காவது சீசன் கடந்த ஜனவரி 28ந் தேதி தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது.
டிக்கெட் டு பினாலே: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் செமி பைனல் சுற்று நடைபெற்றது. இதில், டிக்கெட் டு பினாலே சுற்றில் விசித்திரா நேரடியாக பைனலிஸ்ட் ஆகிவிட்ட நிலையில்,நேற்றைய எபிசோடில் செமி பைனல் சுற்றில் கிரண், மைம் கோபி, சிவாங்கி, ஸ்ருஷ்டி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
நான்கு பைனலிஸ்ட்: இதில், இரண்டாவது பைனலிஸ்ட்டாக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தொடர்ந்து சிவாங்கி மூன்றாவது மற்றும் ஸ்ருஷ்டி நான்காவது பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத கிரண் ஐந்தாவது பைனலிஸ்ட்டாக கிரண் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் ஐந்து போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஸ்ருஷ்டி டாங்கே: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடங்கத்தில் இருந்து ஆர்வமுடன் கலந்து கொண்ட ஸ்ருஷ்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேங்க்யூ மோனி மற்றும் தங்கத்துரை உங்கள் இரண்டு பேரையும் நான் மிகவும் காதலிக்கிறேன். நான் மோனியுடன் அதிகமாக சமைத்தது இல்லை. நிகழ்ச்சி முடிவதற்குள் அவருடன் இணைந்து சமைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
எல்லாம் அவங்களால் தான்: இறுதியாக நான் மோனியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. மெயின் டாஸ்கின் போது மோனி கை நடுங்கியதை நான் பார்த்தேன், அவ்வளவு பயம் இருந்தது அவளுக்கு. தங்கதுரை என் அருகில் நின்று ஊக்கப்படுத்தி கொண்டே இருந்தார். ரொம்ப அழுத்தமாக இருந்த நேரத்தில், தங்கதுரை ஜோக் தான் ரொம்ப ஆறுதலாக இருந்தது.நான் வென்ற போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். இவை எல்லாத்திற்கும் காரணம் மோனி மற்றும் தங்கதுரைதான் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.