கோபாலபுரத்தில் சந்திச்சு பேசிய ஸ்டாலின், மு.க.அழகிரி… உதயநிதி கொடுத்த அரசியல் அப்டேட்!

மு.க.அழகிரி என்றாலே மதுரை மற்றும் தென் மண்டல திமுகவை கட்டி ஆண்டவர் என அரசியல் பார்வையாளர்கள் பலரும் கூறுவதை பார்க்கலாம். அதேசமயம் மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து தமிழக அரசியல் களத்தில் புது ஃபார்முலாவை புகுத்தியவர் என்ற விமர்சனம் உண்டு. இவரை கட்சியில் இருந்து நீக்கி முன்னாள் முதலமைச்சர் கலைஞர்

உத்தரவிட்டதை அடுத்து சைலண்ட் மூடிற்கு சென்றார்.

தி.மு.க எதையும் பார்த்து பயப்படாது

மு.க.அழகிரியின் அரசியல்

மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கட்சியின் டைம் லைனில் இருக்கும் தலைவர்கள் பக்கம் தாவினர். எஞ்சியவர்கள் அரசியல் அரங்கில் தென்படுவதை தவிர்த்து கொண்டனர். இந்நிலையில் 2021ல்

தலைமையில்

ஆட்சி அமைந்ததும், குடும்ப சிக்கல்கள் படிப்படியாக கரையத் தொடங்கின. 2022ன் இறுதியில் அமைச்சராக

பொறுப்பேற்றதை அடுத்து, மதுரை சென்றிருந்த போது பெரியப்பா மு.க.அழகிரியை சந்தித்து பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

இதை மு.க.அழகிரி மிகவும் பெருமையாக கருதினார். உதயநிதியின் சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதன்பிறகு கட்சிக்குள் மு.க.அழகிரி வந்துவிடுவார், திமுகவின் தென்மண்டல தளபதியாக திகழ்வார் என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது. அதேசமயம் முன்பை போல் மு.க.அழகிரியின் அரசியல் செயல்பாடுகள் இருக்காது. வேண்டுமெனில் பின்னால் இருந்து காய் நகர்த்தல்களை செய்யலாம். களப்பணி என்பது சாத்தியமில்லை என்றும் கூறினர்.

தயாளு அம்மாள் பிறந்த நாள்

ஆனால் அழகிரி குறித்த பேச்சு பெரிதாக எழவில்லை. இந்நிலையில் தயாளு அம்மாவின் 91வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள கோபாலபுரம் இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சகோதரர் மு.க.அழகிரியும் சென்றனர். அதுவும் ஒரே நேரத்தில் சென்றது தான் ஹைலைட். அப்போது இருவரும் பேசிக் கொண்டனர். மேலும் திமுக எம்.பி கனிமொழியும் வருகை புரிந்திருந்தார்.

ஸ்டாலின், அழகிரி சந்திப்பு

இவர்கள் மூவரும் தயாளு அம்மாள் பிறந்த நாள் விழாவை ஒட்டி நடந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிகிறது. இந்த நிகழ்வின் மூலம் திமுகவின் முதல் குடும்பம் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டதாக பேசத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சரும், மு.க.ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின், அப்பாவும், பெரியப்பாவும் பார்த்து கொண்டார்கள்.

கட்சிக்குள் வருவாரா அழகிரி?

பேசிக் கொண்டார்கள் என்றார். சமாதானம் ஆகிவிட்டார்களா? என்ற கேள்விக்கு சண்டை போட்டுக் கொண்டார்கள் என யார் சொன்னது. ரெகுலரா சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள் எனக் கூறினார். மீண்டும் கட்சிக்குள் மு.க.அழகிரி வருவாரா? என்ற கேள்விக்கு, அதெல்லாம் தனக்கு தெரியாது என்று பதிலளித்து விட்டு உதயநிதி ஸ்டாலின் சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.