தமிழகத்தின் 49வது தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் பொறுப்பேற்றுள்ளார். இவர் வேலை விஷயத்தில் மிகவும் கறார் பேர் வழி என்ற பேச்சு சக ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப முதல் நாளில் இருந்தே களப்பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
தலைமை செயலாளர் பதவிஇறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட போது அரசு நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் வரும். அதிகாரிகள் புத்துயிர் பெறுவர் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. வடக்கில் மட்டும் ஆய்வு பணிகளில் அடிக்கடி தலைகாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணங்களில் உடன் சென்றார்.சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் பதவியேற்புஆனால் அரசு அதிகாரிகள் மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் பெரிதாக எதுவும் அரங்கேறவில்லை. இந்நிலையில் கிடப்பில் போடப்பட்ட விஷயங்களை சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் தூசு தட்டுவாரா? அரசு இயந்திரம் வேகமெடுக்குமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சென்னையில் ஆய்வுஇந்த சூழலில் சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் இன்று (ஜூலை 9) அதிரடி ஆய்வு மேற்கொண்டார். முதலில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் மண்டலம் முகலிவாக்கம், சபரி நகர் மற்றும் மதனந்தபுரம் பகுதிகளில் ரூ.99.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவுஅப்போது, பருவமழைக்கு முன்னதாக பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடித்தல், பணிகள் நடைபெறும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பணிகள் முடிக்க முடிக்க அந்தந்த பகுதிகளில் தரமான சாலைகளை நெடுஞ்சாலைத் துறை உடனுக்குடன் போட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் சாலையில் ஆய்வுஇதையடுத்து லலிதா நகர் 2ஆவது தெரு, வளசரவாக்கம் மண்டலம் போரூர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். பின்னர் ராமாபுரம், திருவள்ளூர் சாலையில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 2960 மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாநகராட்சி நகர்வன பூங்காஇதன் தொடர்ச்சியாக அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம், ரிவர் வியூ சாலையில் தனியார் பங்களிப்புடன் பராமரிக்கப்பட்டு வரும் மாநகராட்சி நகர்வன பூங்காவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரிகளுக்கு உத்தரவுபூங்காவில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை நல்ல முறையில் தொடர்ந்து பராமரிக்க, கூடுதலாக மரக்கன்றுகள் மற்றும் செடிகளை நட்டு பசுமையாக பராமரிக்கவும், பூங்காவை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க அறிவுறுத்தினார். தற்போது சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கட்டங்களாக தலைமை செயலாளர் ஆய்வு செய்து வருகிறார்.
அடுத்தகட்ட ஆய்வு திட்டங்கள்இதேபோல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று அரசு இயந்திரத்தை முடுக்கி விடும் திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் இடமாற்றம் நடந்தால் அவர்கள் அந்த பதவியில் செட்டிலாகி வேலையை தொடங்க சில வாரங்கள் ஆவது ஆகும்.
ஐஏஎஸ் அதிகாரிகள் ட்ரான்ஸ்பர்தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக அடுத்தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களது பணியில் செட்டிலாகி, அதன்பிறகு அரசு பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் சில உத்தரவுகளை பிறப்பிப்பார். அப்போது தான் தமிழக அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளின் நிலை தெரியவரும்.